இந்திய ரயில்களில் குறையும் ஸ்லீப்பர் கோச்சுகள்.. அதிகரிக்கும் ஏசி பெட்டிகள்.. என்ன நடக்கிறது?
டெல்லி: இந்திய ரயில்வே வழக்கத்தைவிட ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்த விரும்புகிறது.. வரும் காலத்தில் சாதாரண ரயில்களை விட ஏசி ரயில்களையும், ஏசி பெட்டிகளையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும், பயணிகளுக்கான மானியத்தை குறைக்கவும் முடியும் என்கிறார்கள்.
முன்பெல்லாம் சாதாரண ரயில்கள் அதிக அளவில் விடப்படும். அதேபோல் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் அதிக அளவில் இருக்கும். இதேபோல் சின்ன சின்ன ஊர்களில் செல்லும் பயணிகள் ரயில்கள் அதிக அளவில் இயங்கி வந்தன. ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு அப்படியே மாறிவிட்டது. சாதாரண ரயில் பெட்டிகளை விட ஏசி பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே ஆர்வம் காட்டுகிறது.

அதாவது இந்திய ரயில்வே பயணிகள் பிரிவு பிரீமியத்தை நோக்கி முன்னெடுத்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் பயணிகளுக்கான வருவாய் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேநேரம் அதிக பிரீமியம் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுவது மற்றும் அதே காலகட்டத்தில் புதிய உயர்தர ரயில்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரயில்வே அதிக விலையில் பயணிகளுக்கு சேவைகளை வழங்குவது தெரிகிறது.
அதேநேரம் பயணிகள் ரயில் கட்டண உயர்வு பற்றி வராமல் இருக்கவும், பயணிகளுக்கான மானியத்தை குறைக்கவும் இந்த முயற்சி உதவி உள்ளது. எப்படி என்றால், இந்திய ரயில்வே படிப்படியாக 3வது ஏசி, ஏசி 3 எக்கனாமி, 2வது ஏசி, 1வது ஏசி பெட்டிகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது, அங்கு கட்டணம் பொதுவாக ஏசி அல்லாத வகுப்புகளை விட அதிகம் ஆகும். அதே நேரத்தில், குறைந்த கட்டணமே உள்ள ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கோச்களின் உற்பத்தியை இந்திய ரயில்வே குறைத்து வருகிறது.
3வது ஏசி மற்றும் 3வது ஏசி எக்கனாமி பெட்டிகளை பற்றி பார்க்கலாம். 2019-20ல், ரயில்வேயின் மூன்று ஏசி பெட்டிகள் உற்பத்தி என்பது சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையிலும், கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையிலும், ரேபரலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சாலையிலும் நடக்கிறது. கடந்த 2019-20ல் ஏசி 3வது பெட்டி 997 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் 2024-25 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,571 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் 1925 ஆக சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், 2024-25ல் 278 ஆக குறைக்கப்பட்டள்து. அதாவது வெறும் ஐந்து வருடத்தில் ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் தயாரிப்புகளின் எண்ணிக்கை 86 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், பயணியின் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு பயணியின் வருவாய் 2019-20ல் ரூ.62.66ல் இருந்த நிலையில், 2024-25ல் ரூ.107.15 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளில் பிரீமியம் ரயில்களை அறிமுகம் செய்வதில் ரயில்வே அதிக ஆர்வம் காட்டுகிறது.. இந்த ரயில் பெட்டிகள் எல்லாமே ஏசி ரயில்கள் ஆகும். உதாரணமாக வந்தே பாரத் ரயில்கள் தான் இப்போது இந்தியாவில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்யப்படுகின்றன. குறைந்த நேரத்தில் போக வேண்டிய இடங்களுக்கு போக முடிகிறது.
உயர்தர உணவு மற்றும் ரயில் பெட்டிகள், விமானத்திற்கு நிகரான வசதிகள் போன்றவை காரணமாக வந்தே பாரத் ரயில்களை நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் அதிக அளவில் விரும்புகிறார்கள் . அதேநேரம் கட்டணம் அதிகம் என்றாலும் அதற்கு நிகராக வசதிகளை பயணிகளுக்கு ரயில்வே அளித்து வருதுகிறது.
ஒரு ரயிலில் அதிக ஏசி பெட்டிகளைச் சேர்ப்பதன் மூலம் அந்த ரயிலில் அதிக வருவாய் ஈட்ட ரயில்வேயால் முடிகிறது. உதாரணமாக டெல்லி மற்றும் கொல்கத்தா இடையே ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டின் விலை பூர்வா எக்ஸ்பிரஸில் வெறும் ரூ. 635 ஆக உள்ளது. ஆனால் , ஏசி 3 அடுக்கு பெட்டியில் பயணிக்கும் ஒரு பயணி ரூ. 1,665 செலுத்த வேண்டும் .
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், வந்தே பாரத் விரைவு ரயிலை போல், 40,000 வழக்கமான ரயில்களை அரசு மாற்றும் என்றார். தற்போது 41 வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் ஓடுகிறது என்றும் 800 க்கும் மேற்பட்ட ரயில்களை 2030 க்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இப்படி ஏசி பெட்டி மற்றும் உயர் தர ரயில்கள் என பிரீமியத்தை நோக்கி ரயில்வே நகருவதன் மூலம் மானியங்களை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது, விற்கப்படும் ஒவ்வொரு பயணி டிக்கெட்டையும் 55 சதவீத சலுகை விலையில் வழங்கி வருகிறது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications