Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிதாக வேலைக்கு சேரும்.. எல்லா இளைஞர்களுக்கும் ரூ.15,000 ஊக்க தொகை! பிரதமர் மோடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி அங்கிருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக இளைஞர்களுக்காகப் பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் புதிதாக வேலைக்குச் சேரும் ஆண்கள், பெண்களுக்கு அரசு ரூ.15,000 வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் இன்று கோலகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் டெல்லி, சென்னை உட்பட முக்கிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுபாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Independence Day Narendra Modi India

சுதந்திர தினம்

இந்தாண்டு ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைகிறது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளை இந்தியப் பாதுகாப்புப் படை அழித்தது. அதைக் கொண்டாடும் வகையில் இந்தச் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைகிறது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். 140 கோடி மக்களின் கொண்டாட்டம் தான் இந்தச் சுதந்திர தினம் என்ற பிரதமர் மோடி, கோடிக் கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வேலைக்கு சேர்வோருக்கு ரூ.15,000

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா இனியும் அடிபணியாது என்றார். மேலும், சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்தார். செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, "இளைஞர்களே, இன்று ஆகஸ்ட் 15. இந்த சிறப்பான நாளில், நமது நாட்டு இளைஞர்களுக்காக ₹1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தைத் தொடங்குகிறோம்.

பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற இந்த புதிய திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம், தனியார் துறையில் முதல் முறையாக வேலைக்குச் சேரும் ஆண், பெண் இருபாலருக்கும் அரசு ₹15,000 வழங்கும். மேலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

யாருக்கு கிடைக்கும்

இதில் இரு வகையான திட்டங்கள் உள்ளன. முதல் திட்டம் புதிதாக வேலைக்கு சேர்வோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பானது. அடுத்த திட்டம் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகை தொடர்பானதாகும்.

முதல் திட்டத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, முதல் மாதம் ரூ.15,000 வரை உள்ள வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை, இரண்டு தவணைகளாக மத்திய அரசு வழங்கும். ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். பணியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை வழங்கப்படும். 12 மாத சேவைக்குப் பிறகு இரண்டாவது தவணை வழங்கப்படும்.

முக்கிய அறிவிப்பு

அடுத்தது அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் ஊழியர்களை நியமிக்கும் முதலாளிகளுக்கு இதில் சலுகைகள் வழங்கப்படும். கூடுதல் பணியாளர் ஒருவருக்கும், மாதம் ரூ.3,000 வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கும். இந்த ஊழியர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். உற்பத்தித் துறைக்கு மட்டும் இந்த ஊக்கத்தொகை மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+