இந்திய சுதந்திர தினம் 2020: தேசிய அளவிலான தேசபக்தி கவிதைப் போட்டியில நீங்க கலந்துக்கங்க
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள்
டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT), கலாச்சார அமைச்சின் தன்னாட்சி அமைப்பு அறிவித்துள்ள இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள். 10 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.
நாடு சுதந்திர பெறுவதற்கு முன்பு பாரதியும் பாரதிதாசனும் பல கவிஞர்களும் தேசபக்தியை பறைசாற்றும் பல பாடல்களை எழுதியும் பாடியும் மக்களிடையே தேச பக்தியை பெருகச் செய்தனர். நாடு முழுவதும் தேசப்பக்தி பாடல்களைப் பாடியே அந்நிய தேசத்தவர்களை அலற வைத்தனர் நம் விடுதலைப் போராட்ட வீரர்கள்.

நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. 74வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்போகும் இந்த தருணத்தில் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. கொரோனா என்னும் அரக்கனுக்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சி.சி.ஆர்.டி), சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை அறிவித்துள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
https://www.mygov.in/task/national-level-patriotic-poem-competition/
தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை எழுதுபவர்கள் பிறந்த தேதி 01.07.2007 முதல் 30.06.2011 வரை பிறந்த குழந்தைகள் தங்கள் உள்ளீடுகளை அனுப்ப தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்பரிசு ரூ. 15000, இரண்டாம் பரிசு ரூ. 7500, மூன்றாம் பரிசு ரூ. 5000 ஆறுதல் பரிசு ரூ.2000 வழங்கப்படும். போட்டிக்கான கவிதை அல்லது பாடலை ஆகஸ்ட் 7,2020 இரவு 11.30 மணிவரை பதிவேற்றம் செய்யலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications