இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205- 4-வது இடத்தில் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 5,67,205 மட்டும்தான். இதில் தமிழகம் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,403. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,46,879.

India- Active coronavirus cases only 5,67,205

தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - அதாவது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205 மட்டும்தான். இதில் மகாராஷ்டிராவில் 1,49,214 பேரும் கர்நாடகாவில் 73,218 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆந்திராவில் 72,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,738 பேர் மட்டுமே.

கொரோனா மரணங்களில் இந்திய அளவில் மகாராஷ்டிராதான் அதிகம். அங்கு 15,316 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 4,034 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். தமிழகத்தில் அண்மையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+