இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு
டெல்லி: வடக்கு சிக்கிம் செக்டாரில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிம் பகுதியிலுள்ள, கொங்க்ரா லா மற்றும், திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தின், கம்பா சோங்கிலுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) ஆகியவற்றுக்கு இடையே இந்த ஹாட்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
ஹாட்லைன் இரு நாட்டு எல்லைகளில் நம்பிக்கை மற்றும் நல்லுறவு உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹாட்லைன் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது. அன்று பிஎல்ஏ தினம் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
"இரு நாடுகளின் ஆயுதப்படைகள் தரை தளபதிகள் மட்டத்தில் தகவல்தொடர்புக்காக இது பயன்படும்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹாட்லைன் தொடக்க விழாவில் இரு தரப்பு தளபதிகளும் கலந்து கொண்டனர், நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தி பரிமாறப்பட்டது என்று ராணுவம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முற்பட்ட போது அதை தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. கல்வான் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கடந்த வருடம் கொல்லப்பட்டனர்.
இதன் பிறகு இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. சீனநாட்டின் பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், ராணுவத்தினர் மத்தியில் அவசர தேவைகளுக்கு ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வடகிழக்குப் பகுதியில் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
நாட்டின் உயர்ந்த கீர்த்தி சக்கரா விருது வென்ற தேனி ராணுவ வீரர்.. நெகிழ வைத்த ஊர் மக்கள் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
போர் திறனில் கைதேர்ந்தவர்.. இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் நியமனம்.. யார் இவர் தெரியுமா? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications