டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.. விமானப்படை தளபதி பதவுரியா அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடனான, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய பதற்ற நிலைமை அமைதியாக தீர்க்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா தெரிவித்தார்.

பதற்ற நிலைமை அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

நமது பிராந்தியத்தில் உள்ள தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையால், நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை

உடனடியாக தயார் நிலை

உடனடியாக தயார் நிலை

லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் நிலவரம், குறுகிய காலத்தில் நாம் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான, ஒரு படிப்பினையாகும். இப்போது குறுகிய காலத்திலும் தயாராகும் யுக்திகளை நாம் கற்றுக்கொண்டுவிட்டோம்.

பதில்

பதில்

எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், தக்க பதிலை தர நாங்கள் முழு அளவில் ஆயத்தமாக உள்ளோம் என்ற தகவலை தேசத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். கல்வானின் துணிச்சலானவர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டேன் என்று அவர் மேலும் கூறினார்.

சமாளிக்க ரெடி

சமாளிக்க ரெடி

நாங்கள் நிலைமையை அறிந்திருக்கிறோம். எல்லைக்கு அப்பால் அவர்களின் விமான பலம், அவர்களின் முகாம்கள் என அனைத்தையும் நாங்கள் அறிந்துதான் வைத்துள்ளோம். மேலும் எந்தவொரு சூழ்நிலையை சமாளிக்கவும், போதிய அளவுக்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பதவுரியா தெரிவித்தார்.

காஷ்மீர் பயணம்

காஷ்மீர் பயணம்

இதனிடையே பதவுரியா, 2 நாட்கள் பயணமாக காஷ்மீருக்கு சென்றதாகவும், அங்கே இந்திய விமானப்படை நிலைகளை ஆய்வு செய்து வழிகாட்டியதாகவும், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

English summary
All efforts are underway to ensure that the current situation at the Line of Actual Control is resolved peacefully, Indian Air Force Chief, RKS Bhadauria said. In spite of unacceptable Chinese action after agreements reached, during military talks and resulting in loss of lives, all efforts are underway to ensure that the situation is resolved peacefully, the IAF chief also said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X