சுசுலில் சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்து வைத்த மூவ்.. பின்வாங்க வைக்க மாஸ் பிளான்
டெல்லி: இந்திய ராணுவத்தினர், சுசுல் செக்டாரில் சீன ராணுவத்தினரின் நகர்வுகளை தடுத்து, தென்கரையான பாங்கோங் த்சோ மற்றும் ரெசாங் லாவுக்கு அருகிலுள்ள ரெச்சின் லா ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய மற்றும் சீன படைப்பிரிவு தளபதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று சந்தித்து பேசினர். இந்தியாவை பொறுத்தவரை சீன ராணுவத்தைத அங்கிருந்து மொத்தமாக பின்வாங்க வைப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
Recommended Video
லடாக்கின் பாங்கோங் வடக்கு கரையில் உள்ள பிங்கர் 4 பாண்ய்டுக்கு மேற்கே மலைகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஃபிங்கர் 8 இலிருந்து 8 கி.மீ தூரத்திற்கு வந்து சீனர்கள் தொடர்ந்து மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அவர்களை அங்கிருந்து பின்வாங்க வைப்பதை நோக்கமாக கொண்டு பிங்கர் பாண்ய்ட் 3 இல் இந்திய ராணுவத்தினர் முன்னேறியுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் இந்த நகர்வுகள், மே மாத தொடக்கத்தில் தொடங்கிய எல்லை நெருக்கடியைத் தீர்க்க சீனர்களுடனான இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் நிலைக்கு செல்ல வேண்டும்
ஜூலை மாதத்தில் இருந்தே சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் பெரிதாக முன்னேறவில்லை, ஏனெனில் பாங்கோங் த்சோ வடக்கு கரை மற்றும் கோக்ரா போஸ்டில் படைகளை விலக்கி கொள்ள சீனா தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் இந்தியாவோ இரு தரப்பிலும் உள்ள ராணுவ வீரர்களை ஏப்ரல் மாதத்தில் எப்படி இருந்ததோ அப்படியான நிலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் உள்ளது.

இந்தியா விறுவிறு
ஒரு மூத்த இராணுவ அதிகாரி இதுபற்றி கூறுகையில், பாங்காங் தென் கரையில் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவம் விரைவாக நகர்ந்தது. சீன ராணுவத்தினர் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுப்பதைத் தடுக்கும் விதமாக உயரமான மலைகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வடக்குக் கரையிலும், இராணுவம் தனது நிலைகளை சரிசெய்துள்ளது என்றார்.

இந்தியா இருக்கும் இடம்
சீனர்கள் ஃபிங்கர் 4 ரெட்லைனில் இருப்பதால், இந்திய துருப்புக்கள் ஃபிங்கர் 3 ரெட்லைனில் உயரமான மலைகளை ஆக்கிரமித்தன, மேலும் சீனாவின் ஆக்கிரிமிப்பில் உள்ள ஃபிங்கர் 4 க்கு மேற்கே படைகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்திய ராணுவம் உயரமான இடத்தில் இருப்பதால் சீனர்களை அங்கிருந்து எப்படியும் பின்வாங்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாம்.

ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு
ஜூலை நடுப்பகுதியில் படைவிலகல் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக, இருபுறமும் துருப்புக்கள் வடக்குக் கரையில் பின்வாங்கின. சீனர்கள் ஃபிங்கர் 4 தளத்தை விட்டு வெளியேறி ஃபிங்கர் 5 க்குச் சென்றனர், அதே நேரத்தில் இந்தியர்கள் ஃபிங்கர் 3 தளத்திற்கு திரும்பினர். ஆனால் சீனர்கள் ஃபிங்கர் 4 ரெட்லைனை காலி செய்ய மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை அங்கிருந்து பின்வாங்க வைப்பதற்காக இந்தியா இப்போது மேற்கு நோக்கி மற்ற உயரமான மலைகளை ஆக்கிரமித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வரும்
பாங்காங் ஏரியின் தென் கரையிலும், ரெச்சின் லாவிலும், இந்தியா மலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சீனாவின் மோல்டோ துறை வீரர்களுக்கு கட்டளையிட்டு வெளியேற வலியுறுத்தி வருகிறது. 1962 ஆம் ஆண்டு போரில் சீனா செய்ததைப் போல, 2 கி.மீ அகலமுள்ள பாஸ், சுசுலில் இந்த அணுகுமுறை இந்தியா பின்பற்றி உள்ளது, இராணுவ நடவடிக்கைக்கு ஏற்ற நிலப்பரப்பு ஆகும். தந்திரமான சாதகமான அம்சங்களில் தன்னை நிலைநிறுத்துவதன் மூலம், இந்திய இராணுவம் அஙகு ஆதிக்கம் செலுத்துவதோடு, சீனாவை அங்கிருந்து வெளியேற வைக்க முயன்று வருகிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு சீனா முன்வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications