டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னறிவிப்பு ஏதும் இல்லை.. திடீரென விமானத்தில் கிளம்பி லடாக் சென்ற மோடி.. பெரும் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திடீரென விஜயம் செய்துள்ளார். இது சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளை உற்றுநோக்க செய்துள்ளது.

Recommended Video

    India China Border | Modi in Leh Boost to Soldiers

    லடாக் பகுதியின், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயன்று வருகிறது. ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலமாக லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    திடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன? திடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன?

    மோடி திடீர் விஜயம்

    மோடி திடீர் விஜயம்

    மோடியுடன் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உடன் சென்றார். லே பகுதிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சீனாவுடன் மோதல் நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பிரதமர் நேரடியாக ஆய்வு செய்கிறார். இத்தனை மோதல் நிலவக் கூடிய ஒரு பகுதிக்கு பிரதமரே நேரடியாக சென்று உள்ளது சீனாவை மட்டுமின்றி உலக நாடுகள் அத்தனையையும் உன்னிப்பாக கவனிக்கச் செய்துள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    லே சென்றுள்ள மோடி, ராணுவ கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் எல்லை பிரச்சினை மேலும் பரபரப்பு கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு பக்கம் ரஷ்யாவுடன் அதிநவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மற்றொரு பக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உடன் பிரதமர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    ஏற்பாடுகள் தீவிரம்

    அமெரிக்காவும், இந்தியாவுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்புவது தயார் என்று கூறியுள்ளது. இப்படி உலக நாடுகளின் ஆதரவையும் பெற்றுள்ளது இந்தியா. மற்றொரு பக்கம் இந்தியாவில் இருந்து தகவல்களை சீன நிறுவனங்கள் திருடி விடக்கூடாது என்பதற்காக 59 முக்கியமான செயலிகளை இந்தியா தடை விதித்துள்ளது. இப்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில் தான், பிரதமர் மோடி திடீரென எல்லைப் பகுதிக்கு விரைந்து உள்ளது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

    முக்கிய நகர்வு

    முக்கிய நகர்வு

    இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் செல்வதாக இருந்தது. ஆனால் நேற்று திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் மோடியே அங்கு சென்றுள்ளார். இதன் மூலம், எல்லை பிரச்சினையில், இந்தியா மிகவும் தீவிரமாக உள்ளது என்ற மெசேஜ் உலக நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Prime Minister Narendra Modi arrived in Leh. Accompanied by Chief of Defence Staff Gen Bipin Rawat, he is likely to meet the soldiers injured in the violent clash at Galwan Valley on June 15.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X