கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் துவங்கப்பட்டுள்ளது.. சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவில் ஒரு பெண் செயலாளரே கையெழுத்திட்டுள்ளார் என்று, அம்மாநில முதலதைமச்சர் வி.டி.சதீசன் பெருமைபட கூறியிருப்பது, கேரள மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கேரளா தேர்தலில் மிகப்பெரிய அரசியல் டர்னிங் பாயிண்ட் நடந்துள்ளது... காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் 7ம் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மக்களுக்காக 5 இந்திரா கேரண்டிகளை அறிவித்திருந்தார். அதில் மிக முக்கியமானதுதான் இந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயண வாக்குறுதி ஆகும். இப்போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மே 18ம் தேதி நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலவச அரசு பேருந்து பயணம்
அதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பிரியதர்ஷினி திட்டத்தை, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் இன்று திங்கட்கிழமை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான சாதாரண பஸ்களில் மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் முற்றிலும் கட்டணமின்றி பயணிக்கலாம்.
சாதாரண அரசு பஸ், நகர பஸ், நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்ட சாதாரண அரசு பஸ், சீர்நிலை சாதாரண அரசு பஸ், டவுன் டூ டவுன் பஸ், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மற்றும் கிராமவாண்டி சேவைகள் ஆகிய ஏழு வகையான சாதாரண பஸ்களில் இந்தச் சலுகை பொருந்தும். பெண்கள் எந்தெந்த பஸ்கள் இலவச பஸ்கள் என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், அந்த பஸ்களில் பிரத்யேகமாக ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா முதலமைச்சர் நெகிழ்ச்சி
இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் வி.டி. சதீசன், இந்த பிரியதர்ஷினி திட்டத்திற்காக கேரள அரசு ஆண்டுதோறும் சுமார் எண்ணூறு கோடி ரூபாய் நிதியைச் செலவிடுகிறது. கே.எஸ்.ஆர்.டி.சி.யின் வருவாயை மேலும் அதிகரிப்பதில் அதன் ஊழியர்கள் தான் மிக முக்கியப் பங்காற்றப் போகிறார்கள்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் தங்களுடைய சில கவலைகளைத் தெரிவித்திருந்தாலும் அவர்களும் நமது பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய அங்கமே. அரசு பஸ்கள் முழுமையாக இயங்காத பல பகுதிகளில் மக்கள் தனியார் பஸ்களையே நம்பியுள்ளனர் என்பதால், அவர்களின் பங்களிப்பை மேலும் உறுதி செய்வதற்கான தகுந்த வழிமுறைகளை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்.
அரசின் பிரியதர்ஷினி திட்டம்
எந்தவொரு துறையும் நலிவடைந்து வீழ்ச்சியடையக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது, இந்த பிரியதர்ஷினி திட்டம் என்பது கேரளப் பெண்களுக்கு இந்த அரசு அளிக்கும் மிக உயரிய மரியாதையின் அடையாளமாகும், நமது சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான மிக முக்கிய செய்தியாகவும் இது அமைகிறது என்றும், இந்த உத்தரவில் ஒரு பெண் செயலாளரே கையெழுத்திட்டுள்ளார் என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்தத் திட்டம் ஒருபுறம் தீவிரமாக வரவேற்கப்பட்டாலும், பொருளாதார ரீதியாக கேரளாவுக்கு இது ஒரு பெரிய சவால் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
காரணம் இந்தியாவின் பழமையான போக்குவரத்து கழகங்களில் ஒன்றான கே.எஸ்.ஆர்.டி.சி., ஏற்கனவே மிகக் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2019-20 நிதியாண்டில் ₹12159 கோடியாக இருந்த மொத்த நஷ்டம், கடந்த 2024-25-ஆவது நிதியாண்டில் ₹20961 கோடி என்ற அசுரத்தனமான எல்லையைத் தொட்டுள்ளது. இந்த சூழலில், பிரியதர்ஷினி திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹800 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லாபம் தருமா போக்குவரத்து துறை
முந்தைய எல்.டி.எஃப். ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த கே.பி. கணேஷ் குமார், தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டபோதே, இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அது கே.எஸ்.ஆர்.டி.சி.யை நிரந்தரமாக மூடுவதற்குத்தான் வழிவகுக்கும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால் இப்போதைய போக்குவரத்து அமைச்சர் சி.பி. ஜான் மற்றும் அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத் ஆகியோர் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிதிச் சுமையை போக்குவரத்து கழகத்தின் மீது நாங்கள் சுமத்தப் போவதில்லை என்றும், இதற்கான முழுத் தொகையையும் கேரள அரசே நேரடியாக மானியமாக வழங்கிவிடும் என்றும், அத்தோடு டிக்கெட் சாரா வருவாயை பெருக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் தெளிவுபடுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
இப்போது அரசு பஸ்களில் பயணிக்கும் 25 லட்சம் பயணிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான் என்பதால், இந்தத் திட்டத்தால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நம்புகிறார்கள். அந்தவகையில், கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அம்மாநிலப் பெண்கள் மத்தியில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது...!!!
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications