டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்!

Subscribe to Oneindia Tamil

பல ஆண்டுகளாக பொதுமக்கள் எழுப்பி வந்த "பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல்" என்ற குற்றச்சாட்டை கட்டுப்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாக செயல்படத் தொடங்கியது. இதன் விளைவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக் நிர்வாகம், கடந்த 20 நாட்களில் சுமார் 200 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

vijay tasmac TASMAC suspends employees TASMAC extra charge Rs 10 CM Vijay TASMAC action TASMAC overcharging crackdown TASMAC employee suspension Vijay government TASMAC TASMAC transparency drive TASMAC Rs 10 extra bottle TASMAC social media complaints TASMAC disciplinary action 10 10

இந்த நடவடிக்கை, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள 717 கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைக்கு பின்பு எடுக்கப்பட்ட மிக கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

200 ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, விஜய் உளவுதுறைக்கு விடுத்த உத்தரவின் பெயரில் பல நிர்வாக அமைப்புகள் இணைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆய்வில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை கடந்த 20 நாட்களில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு அமைந்து சுமார் 36 நாட்கள் ஆன நிலையில், இத்தகைய பெரிய அளவிலான சஸ்பெண்ட் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே, மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சில ஊழியர்கள் இந்த உத்தரவை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரித்திருந்தது.

சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வைரல்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோக்களில், ஊழியர்கள் பொதுமக்களிடம் கூடுதல் பணம் கேட்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோக்களைப் பார்த்த பிறகு, நிர்வாகம் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் புகார்களும், சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களும் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

அரசின் கடும் நடவடிக்கை

டாஸ்மாக் நிர்வாகம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், சஸ்பெண்ட், பணியிட மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை போன்ற தண்டனைகள் அடங்கும்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, டாஸ்மாக் கடைகளில் ஒழுங்கு மற்றும் நேர்மையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை

புதிய அரசு பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், டாஸ்மாக் விற்பனை முறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நிர்ணய விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை டாஸ்மாக் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், பல ஆண்டுகளாக பொதுமக்கள் எழுப்பி வந்த "பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல்" என்ற குற்றச்சாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்படத் தொடங்கியிருப்பது தெளிவாகிறது. அடுத்த கட்டமாக ஆய்வுகள் மேலும் விரிவுபடுத்தப்படுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+