போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை.. அணுகுண்டை எடுக்கவும் இல்லை - வெளியுறவு செயலாளர் தகவல்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்காதான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டபோது, போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தியா போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் டிரம்ப் அறிவித்தது ஏன்? இந்திய பிரதமரை விட அமெரிக்க அதிபர் அதிகாரம் கொண்டவரா? என்றெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், போர் நிறுத்தத்தில் டிரம்ப்பின் பங்கு எதுவும் இல்லை என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். அதே நேரம், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் மிஸ்ரி கூறியுள்ளார். இதனை சிஎன்என்-நியூஸ்18 செய்தி ஊடகம் உறுதி செய்துள்ளது. இது வழக்கமான சண்டைதான். ஆனால், அமெரிக்கா கூறுவதை போல அணு ஆயுத தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், இந்தியாவின் ராணுவ தளபதியை தொடர்பு கொண்டு போர்நிறுத்த வேண்டுகோள் விடுத்ததாகவும் மிஸ்ரி கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் ஜெய்ஷ் இ முகமது எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இந்தியா கூறியிருந்தது. இந்த ஆபரேஷன் இரு நாடுகளுக்கு இடையே மோதலை தூண்டியது. இந்த மோதலை நான்தான் தலையிட்டு நிறுத்தியதாகவும், இல்லையெனில் அணு ஆயுத போர் வெடித்திருக்கும் எனவும் டிரம்ப் பல இடங்களில் கூறி வருகிறார்.
போர் நிறுத்தம் குறித்து தனது சோஷியல் மீடியாவில் அவர் கூறியிருந்ததாவது, "போர் நிறுத்தத்திற்காக இரவு நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது. இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போர் நிறுத்தத்திற்காக புத்திசாலித்தனமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்" என்றும் கூறியிருந்தார். இது இந்தியாவில் எதிர்க்கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் கடந்த வாரமே, அமெரிக்காவின் தலையீடு போர் நிறுத்தத்தில் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து மிஸ்ராவும் அதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications