"உச்சக்கட்ட எமர்ஜென்சி.." நாடு முழுக்க அலறிய செல்போன்கள்.. பதறியடித்து எழுந்த மக்கள்! என்னாச்சு
டெல்லி: நமது நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களிடம் சரியான நேரத்தில் எச்சரிக்கையை கொண்டு செல்லும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அவசரக்கால தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று, மே 2ம் தேதி நாடு தழுவிய அளவில் 'செல் பிராட்காஸ்ட்' (Cell Broadcast) எச்சரிக்கை அமைப்பைச் சோதனை செய்து வருகிறது..
இன்று உங்கள் மொபைல் போனில் திடீரென ஒரு எச்சரிக்கை செய்தி வரலாம்.. அதனுடன் ஒரு பெரிய சத்தமும், அதிர்வும் ஏற்படலாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடையத் தேவையில்லை. இது ஒரு சோதனை மட்டுமே என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுக்க எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் அமைப்பைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனைசெய்யும் நிலையில், இதன் காரணமாகவே உங்களுக்கும் செல்போனில் அலர்ட் மெசேஜ் வரும்.

டெல்லி உட்பட மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. அதேநேரம் எல்லைப் பகுதிகள் மற்றும் தேர்தல் மாநிலங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் இந்த எமெர்ஜென்சி மெசேஜ் சோதனை அனுப்பப்பட்டு வருகிறது.
செல் பிராட்காஸ்ட்
சாதாரண எஸ்.எம்.எஸ் மெசேஜ்களை போல இல்லாமல்.. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும். இதன் மூலம் பேரிடர் காலங்களில் நெட்வொர்க் நெருக்கடி இருந்தாலும், சில நொடிகளில் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும். சுனாமி, நிலநடுக்கம், மின்னல் பாதிப்பு அல்லது எரிவாயு கசிவு போன்ற அவசர காலங்களில் மக்களை எச்சரிக்க இது பயன்படும். இது 'சி-டாட்' (C-DOT) நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் எச்சரிக்கை வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டியவை
- பதற வேண்டாம்: இந்தச் செய்தி வந்தால் எந்தப் பதட்டமும் அடையத் தேவையில்லை; இது வெறும் சோதனை ஓட்டம் மட்டுமே.
- பதில் தேவையில்லை: இந்தச் செய்திக்கு நீங்கள் எந்தப் பதிலும் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
- ஒன்றுக்கு மேற்பட்ட முறை: வெவ்வேறு நெட்வொர்க் கோபுரங்கள் சோதிக்கப்படுவதால், சிலருக்கு இந்த எச்சரிக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரலாம்; இது சாதாரணமான ஒன்றுதான்.
- பல மொழிகளில்: இந்தச் சோதனை செய்திகள் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்தப் பிராந்திய மொழிகளில் (தமிழ் உட்பட) வரக்கூடும்.
செட்டிங்ஸ் பார்ப்பது எப்படி?
உங்கள் போனில் 'Cell Broadcast' வசதி ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சோதனை செய்தி வரும். இதற்காக Settings > Safety and Emergency > Wireless Emergency Alerts > Test Alerts என்ற பகுதிக்குச் சென்று இதைச் சரிபார்க்கலாம்.
ஏன் முக்கியம்
இயற்கைப் பேரிடர்களின் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதே மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதை முறியடிக்க அரசு எடுத்துள்ள இந்த 'செல் பிராட்காஸ்ட்' முயற்சி வரவேற்கத்தக்கது. ஒரு உயிரைக் காக்க சில நொடிகள் முன்னதாகக் கிடைக்கும் எச்சரிக்கை மிக அவசியமானது. ஏற்கனவே ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் பல லட்சம் மக்களைக் காக்க இது உதவுகிறது. அப்படியொரு தொழில்நுட்பத்தைத் தான் இப்போது நாமும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளோம்.!
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications