இந்தியாவின் பரிசீலனையில் இருக்கும் 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்!
டெல்லி: இந்தியாவில் 3 கொரோனாவைரஸ் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

உலக நாடுகளில் ஸ்ட்புனிக்V கொரோனவைரஸ் தடுப்பூசியை ரஷ்யா முதன் முதலாக பயன்படுத்தியது. இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதேபோல் பிரிட்டனில் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி நேற்று முதல் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஃபைசர், இந்தியாவின் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
பாரத் பயோடெக் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபைசர் நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த போதுமான உள்கட்டமைப்பு இருக்கிறதா? என்கிற சந்தேகமும் உள்ளது.
இந்த தடுப்பூசிகள் மனிதர்களிடையே சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எந்த வகை தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications