ரஷ்யா வேண்டாம்..வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் ரூ.27,112 கோடியை சேமிக்கலாம் - SBI ஆய்வறிக்கை
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வெனிசுலாவிடம் இருந்து வாங்கினால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.27,112 கோடி வரை மிச்சமாகும் என்று ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்துக்கு நடுவே இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வெனிசுலாவை நோக்கி செல்கிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கடந்த 3ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது படையை பயன்படுத்தி கைது செய்தார். நிகோலஸ் மதுரோ இப்போது அமெரிக்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் உள்ளார். இவர் அமெரிக்காவின் மறைமுக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவும், வெனிசுலாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் மட்டுமே உள்ளது. இதனால் வெனிசுலாவை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தற்போது வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி உள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து அந்த நாட்டால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.
உலகிலேயே அதிக கச்சா எண்ணெய்
அதுமட்டுமின்றி வெனிசுலா என்பது கச்சா எண்ணெய் அதிகமுள்ள நாடாகும். சவுதி அரேபியா, ஓமன், கத்தார், ஈரான், ரஷ்யாவை விட உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா கட்டுக்குள் கொண்டு வர உள்ளது.
வரியை குறைத்த டிரம்ப்
இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியுடன் 2 நாட்களுக்கு முன்பு பேசினார். அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிற்கு பதில் வெனிசுலா, அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க உள்ளது என்று அறிவித்தார். இதுபற்றி மத்திய அரசு சார்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேவேளையில் டொனால்ட் டிரம்ப் கூற்றை இந்தியா நிராகரிக்கும் இல்லை.
இந்தியா நிலைப்பாடு என்ன?
இதனால் தான் நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவை கைவிட்டு வெனிசுலா, அமெரிக்காவிடம் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால் இந்தியா, சீனா மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. தற்போதைய சூழலில் நம் நாட்டின் ஆதரவு ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமாகும். இதனால் இந்த விஷயத்தில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
எஸ்பிஐ அறிக்கை
இந்நிலையில் தான் நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எஸ்பிஐ எனும் ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது: ஆயில் பிரைஸ் இணையதளத்தின் அடிப்படையில் பார்த்தால் வெனிசுலாவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 51 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.4,613.77)உள்ளது.
வெனிசுலாவிடம் நாம் கச்சா எண்ணெய் நமக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கலாம். உதாரணமாக 10 டாலர் முதல் 12 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.900 முதல்1050 வரை) கிடைத்தால் அது இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாக லாபகரமாக அமையும்.
ஆண்டுக்கு ரூ.27,112 கோடி மிச்சம்
நல்ல தள்ளுபடிகள் கிடைக்கும் பட்சத்தில் ரஷ்யாவில் இருந்து வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது ஆண்டுக்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் 3 பில்லியன் டாலர் (ரூ.27,112 கோடி) வரை குறையும். இது வெனிசுலாவின் கச்சா எண்ணெய் 10 டாலர் முதல் 12 டாலர் வரையிலான தள்ளுபடியில் கிடைத்தால் மட்டுமே சாத்தியம்.
தள்ளுபடி இல்லாவிட்டால் சிக்கல் வரலாம். ஏனென்றால் நம் நாட்டில் இருந்து வெனிசுலா என்பது அதிக தொலைவில் உள்ளது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு தொலைவிலும், ரஷ்யாவை ஒப்பிடும்போது இரண்டு மடங்கு தூரத்திலும் வெனிசுலா அமைந்துள்ளது.
தள்ளுபடி இல்லாவிட்டால்..
இதனால் அங்கிருந்து கச்சா எண்ணெயை கொண்டு வந்து எரிபொருளாக்கி விற்பனை செய்வது என்பது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். போக்குவரத்து செலவு, காப்பீட்டு செலவு உள்ளிட்டவற்றுக்கு அதிக நிதி தேவைப்படும். இது மக்களை நேரடியாக பாதிக்கலாம்.
அதுமட்டுமின்றி வெனிசுலாவிடம் கிடைக்கும் கச்சா எணணெய் அடர்த்தியானது. இதனால் அந்த கச்சா எண்ணெயை இந்தியா சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பம் சார்ந்த செலவுகளும் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதனால் வெனிசுலாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் பெறுவது முக்கியம்.
இந்தியா என்ன செய்யும்?
மேலும் ரஷ்யா இப்போது நமக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தருகிறது. உக்ரைன் போர் முடியும்போது ரஷ்யாவின் தள்ளுபடி கிடைக்காது அல்லது குறையலாம். இதனால் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது எதிர்காலத்தில் சாதகமாக மாறலாம். ஒரு நாட்டை மட்டுமே நம்புவதை விட பிற நாடுகளில் இருந்து கணிசமான அளவு பெறுவது லாபகரமானதாக இருக்கும்'' என கூறப்பட்டுள்ளது.
இதனால் டிரம்ப் அழுத்தத்துக்கு நடுவே நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து தள்ளுபடி விலையில் வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல்












Click it and Unblock the Notifications