இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது - குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரிப்பு

இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2,91,93,085 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 96 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வருகிறது.

India covid update: Corona incidence in India is below 50,000 - recovery rate is increasing

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 48698 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு இன்று ஆளானவர்களை விட, அதில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2,91,93,085 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் 1,183 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3,94,493 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,95,565 ஆக குறைந்துள்ளது.

India covid update: Corona incidence in India is below 50,000 - recovery rate is increasing

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 96 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார். மே 3ம் தேதி முதல் குணமடையும் விகிதம் உயர்ந்து வருகிறது. தற்போது 96 சதவீதமாக உள்ளது. ஜூன் 11 முதல் 17 வரை 513 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+