ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம்
டெல்லி: இந்திய அரசியல் முழுக்கவே இப்போது 'தொகுதி மறுசீரமைப்பு' தான் பேசுபொருளாக உள்ளது. "தொகுதிகள் கூடினால் ஜனநாயகம் வலுப்படும்" என்று ஒரு தரப்பு சொல்ல, "தொகுதிகள் கூடினால் தென்னிந்தியாவின் குரல் ஒடுக்கப்படும்" என்று மற்றொரு தரப்பு விமர்சிக்கிறது. பிராந்தியம் வாரியாக தொகுதி மறுவரையறை நாடாளுமன்ற பலத்தை எப்படி மாற்றி அமைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் இப்போது தொகுதி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவே மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வடமாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவொரு சலசலப்பும் இல்லை. ஆனால், தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு இதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது.

விமர்சனம்
ஏற்கனவே தற்போது லோக்சபாவில் வடமாநிலங்களை விடத் தென்மாநிலங்களில் பலம் குறைவாக உள்ளதாகத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென்மாநிலங்களின் வாய்ஸ் மேலும் குறையும் என்பதே இவர்கள் பிரதான விமர்சனமாக உள்ளது.
டெலிமிடேஷன்
எளிமையாகச் சொன்னால், மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பது மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் இந்த டெலிமிடேஷன்.
- கடைசியாக 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
- 1976ல் இந்த எண்ணிக்கை 2026 வரை முடக்கப்பட்டது. அதாவது தொகுதிகள் அதிகரிக்கப்படாது என முடிவு செய்யப்பட்டது.
பேசுபொருள்
இப்போது அந்த 'டெட்லைன்' முடிவுக்கு வருவதால் இது பேசுபொருளாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டிய போதும் கூட அதிகபட்சம் 888 இருக்கைகள் உள்ளது போல ரெடி செய்தது.. இந்தச் சூழலில் தான் தொகுதி மறுவரையறை மூலம் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கும் என அஞ்சப்படுகிறது. ஹிந்தி ஹார்ட் லேண்ட் எனப்படும் இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கப் போவதாக விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
என்ன நடக்கும்
இந்தி ஹார்ட் லேண்ட்(Hindi Heartland): உபி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள இடங்களை விட 76.8% வரை அதிகரிக்கிறது. அதாவது, தற்போது லோக்சபாவில் 38.1 சதவீதமாக இருக்கும் இவர்களின் பலம், 850 தொகுதிகள் வரும்போது 43.1 சதவீதமாக அதிகரிக்கும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா மாநிலங்களின் எண்ணிக்கையும் கூட உயர்கிறது என்றாலும் அவை வெறும் 33.3% மட்டுமே உயரும். இதனால், மொத்த நாடாளுமன்றத்தில் தெற்கின் அதிகாரம் 24.3 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாகக் குறையும்.
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் ஓரளவுக்குத் தங்களது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்கின்றன. அதன் இடங்கள் 56% அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் அதன் பங்கு 1.43%இல் இருந்து 14.4%ஆக மட்டுமே அதிகரிக்கிறது. மறுபுறம் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய கிழக்கு மாநிலங்களின் தொகுதிகள் 48.7% அதிகரிக்கும் சூழலில், அதன் பங்கு 14.4%ல் இருந்து 13.7 சதவீதமாகச் சரிய வாய்ப்புள்ளது.

இதர மாநிலங்கள்
இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வடக்கு மாநிலங்களான பஞ்சாப், ஜம்மு, லடாக்கில் தொகுதிகள் எண்ணிக்கை 58.3% அதிகரிக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதன் பங்கு 4.4%ல் இருந்து 4.5%ஆக மட்டுமே உயர்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் நிலையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் இடங்கள் வெறும் 33.3% மட்டுமே அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தின் பங்கு 4.4%ல இருந்து 3.8%ஆகச் சரிகிறது.
தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் 'குடும்பக் கட்டுப்பாடு' கொள்கையைச் சரியாகப் பின்பற்றி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின. ஆனால், வட மாநிலங்களில் மக்கள் தொகை எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டது. அப்படியிருக்கும்போது மத்திய அரசின் கொள்கையைச் சரியாகப் பின்பற்றிய தென்மாநிலங்களைத் தண்டிப்பது போல இது இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது நல்ல மாணவனுக்குத் தண்டனை கொடுப்பது போன்றது என விமர்சிக்கிறார்கள்.
கூட்டாட்சி
இனி ஒரு கட்சி வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதும், தென்னிந்தியாவின் தயவே இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைத்துவிடலாம். இது இந்தியாவின் 'கூட்டாட்சி தத்துவத்திற்கு' (Federalism) ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், தொகுதிகள் குறைந்தால், மத்திய அரசு வழங்கும் நிதிப் பகிர்விலும் தெற்கு மாநிலங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் டெல்லியின் அதிகாரச் சக்கரம் முழுக்க முழுக்க வடக்கின் கைகளுக்கே செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் ஜிடிபி-யில் பெரும் பங்கு வகிக்கும் தெற்கு, தனது அரசியல் அதிகாரத்தை இழக்கக்கூடும் என்பதே பலருக்கும் கவலையாக உள்ளது..
-
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications