ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்காவுக்கு பேரிடி.. செக் வைத்த இந்தியா! கை கோர்க்கும் EU
டெல்லி: அமெரிக்காவின் வரி காரணமாக ஆட்டோ மொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியாவை மீட்க, மத்திய அரசு ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்படி, இனி ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்க கைக்கொடுக்கும்.
அமெரிக்கா, தனது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு கார்களுக்கு வரியை ஏற்றியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியா, வரியை குறைத்திருப்பது, பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது ஐரோப்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு.. இந்தியா 70% முதல் 110% வரை வரியை விதித்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி இந்த வரி விதிப்பு 40% ஆக குறைக்கப்படும். வருங்காலத்தில் இது 10% வரை குறைக்கப்படும்.
இப்படி வரி குறிப்பை செய்வதன் மூலம், ஆடம்பர கார் நிறுவனங்கள் மிகப்பெரிய பலனடையும். குறிப்பாக போக்ஸ்வேகன், மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் பயனடையும். குறைந்தது ரூ.14 லட்சம் மதிப்பு கொண்ட கார்களில் இருந்து இந்த வரிச்சலுகை தொடங்கும். ரூ.14 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்களுக்கு மட்டுமே வரி சலுகை கொடுக்கப்படும். இப்படி ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படலாம்.
அதே நேரம், இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கிறது. எனவே, இந்த முதலீடுகளை பாதுகாக்கும் விதமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு அமலுக்கு வரும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா தனது நாட்டுக்குள் வரும் கார்களுக்கு வரியை குறைப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். இந்த வரிக்குறிப்பு ஜனவரி 27 முதல் நம்மளுக்கு வருகிறது. அன்றைய தினம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறுகிறது. அதில் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications