பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் எரிசக்தி விநியோகம் முழுமையாகவும் நிலையாகவும் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நேற்றும், நேற்று முன்தினமும் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று வதந்தி பரவியது. இப்படி இருக்கையில், மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை. அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் போதுமான விநியோகத்துடன் சாதாரணமாக இயங்குகின்றன என மத்திய அரசு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

அரசு உறுதியாக இருக்கிறது
தவறான தகவல்கள் பீதியைத் தூண்டும் . தவறான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. மக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் எல்பிஜி (LPG) இருப்பு முற்றிலும் பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதாக மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலையங்களிலும் போதிய அளவு இருப்பு உள்ளது. நாட்டில் எங்கும் தட்டுப்பாடு இல்லை.
எரிபொருள் இருப்பு
உலக அளவில் சுத்திகரிப்புத் திறனில் இந்தியா 4-வது இடத்திலும், ஏற்றுமதியில் 5-வது இடத்திலும் உள்ளது. நாம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்கிறோம். எனவே, உள்நாட்டுத் தேவைக்கான எரிபொருள் இருப்பு என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் சுத்திகரிப்புத் திறனில் இந்தியா 4-வது இடத்திலும், ஏற்றுமதியில் 5-வது இடத்திலும் உள்ளது. நாம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்கிறோம். எனவே, உள்நாட்டுத் தேவைக்கான எரிபொருள் இருப்பு என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு சரியாகிவிட்டது
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கான கடன் காலம் 1 நாளிலிருந்து 3 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் சிக்கல் இருந்தாலும், உலகின் 41-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. குறிப்பாக மேற்கு நாடுகளிலிருந்து வரும் அதிகப்படியானவரத்து, ஹார்முஸ் தடையால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்துவிட்டது.
74 நாட்களுக்கு இருப்பு உள்ளது
அனைத்து இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் 100% திறனுடன் இயங்கி வருகின்றன. அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் 6 நாட்கள் மட்டுமே இருப்பு இருப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியாவின் மொத்த சேமிப்புத் திறன் 74 நாட்கள் ஆகும். தற்போது நம்மிடம் 60 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு (கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து) உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி
உலக அளவில் என்ன நடந்தாலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியக் குடிமக்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்ய முடியும். மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, உள்நாட்டுச் சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தி 40% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தினசரி தேவையில் 60% (50 TMT) உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
வந்துக்கொண்டிருக்கிறது
மீதமுள்ள தேவைக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து எல்பிஜி கப்பல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தினசரி 50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடையில் பீதியினால் 89 லட்சமாக உயர்ந்த சிலிண்டர் தேவை, தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு (50 லட்சம்) திரும்பியுள்ளது.
குழாய் மூலம் எரிவாயு
குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயு (PNG) மலிவானது, பாதுகாப்பானது மற்றும் தூய்மையானது என்பதால் அது ஊக்குவிக்கப்படுகிறது. எல்பிஜி தீர்ந்துவிட்டதால் பிஎன்ஜி-க்கு மாறச் சொல்வதாகப் பரவும் தகவல் முற்றிலும் பொய். இது இந்தியாவின் நீண்டகால எரிசக்தித் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.
சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களையும், வெளிநாடுகளில் நிலவும் வரிசைகளையும் காட்டி இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் குறித்து பீதியை ஏற்படுத்துவது குற்றமாகும். பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications