துருக்கிக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.. விமானத்தை உள்ளே விட மறுத்த பாகிஸ்தான்.. சர்ச்சை
துருக்கிக்கு இந்தியாவில் இருந்து செல்ல பாகிஸ்தான் வான் பகுதியை எளிதாக பயன்படுத்த முடியும். ஆனால் பாகிஸ்தான் இதற்கு மறுக்கவே இந்தியா பாகிஸ்தான் வழியாக செல்லாமல் சுற்றி சென்றுள்ளது.
டெல்லி: துருக்கிக்கு இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்கள் கொண்ட விமானத்தை தங்கள் வான் பகுதியில் நுழைய விடாமல் பாகிஸ்தான் தடுத்து உள்ளது. இதனால் இந்திய விமானம் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
துருக்கியில் கடந்த 36 மணி நேரமாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். இங்கே 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு இணையான பாதிப்பு இந்த முறை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பலி எண்ணிக்கை
துருக்கி நிலநடுக்கம் காரணமாக 3300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 1700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.20 ஆயிரம்பேர் காயங்களுடன் துருக்கியில் மீட்கப்பட்டு உள்ளனர். 4000 பேர் சிரியாவில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 7 ஆயிரம் கட்டிடங்கள் துருக்கியில் இடிந்து விழுந்து உள்ளன. சிரியாவில் 3 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்தியா உதவி
இந்த நிலையில் துருக்கி நாட்டிற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் தற்போது வெளியுறவு கொள்கைக்கும், துருக்கிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. காஷ்மீர் விவகாரத்திலும், சி ஏஏ விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை துருக்கி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் அதை எல்லாம் மீறி தற்போது துருக்கிக்கு இக்கட்டான நேரத்தில் உதவ இந்தியா முன் வந்துள்ளது. இந்த நிலையில்தான் துருக்கிக்கு இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்கள் கொண்ட விமானத்தை தங்கள் வான் பகுதியில் நுழைய விடாமல் பாகிஸ்தான் தடுத்து உள்ளது. இதனால் இந்திய விமானம் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்ன நடந்தது?
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதோடு 100 மீட்பு படை வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர். இது போன்ற மீட்பு பணிகளில் உடல்களை, மனிதர்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற நாய்களும் இந்த மீட்பு பணிக்கு களமிறங்கி உள்ளது. பல்வேறு மீட்பு உபகரணங்களும் இதில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இந்த விமானத்தைதான் தங்கள் வான் பகுதியில் செல்ல பாகிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் மறுப்பு
துருக்கிக்கு இந்தியாவில் இருந்து செல்ல பாகிஸ்தான் வான் பகுதியை எளிதாக பயன்படுத்த முடியும். ஆனால் பாகிஸ்தான் இதற்கு மறுக்கவே இந்தியா பாகிஸ்தான் வழியாக செல்லாமல் சுற்றி சென்றுள்ளது. பாகிஸ்தான் - துருக்கி நட்பு நாடுகளாக இருந்தும் பாகிஸ்தான் இக்கட்டான நேரத்தில் இப்படி செயல்பட்டது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. இந்தியாவின் இந்த உதவிகளை துருக்கி வெளியுறவுத்துறை நட்பான அணுகுமுறை என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications