இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும்: கொழும்பு கருத்தரங்கில் உறுதி!
டெல்லி: இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும் என்று கொழும்பு கருத்தரங்கில் இந்திய தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய - இலங்கை ராணுவக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கண்காட்சியை இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரேமிதா பண்டாரா தென்னகூன் தொடங்கி வைத்தார். இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை தொடர்பான தங்களது உற்பத்திப் பொருட்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தன.

இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிரிதர் அரமனே, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தியாவின் கடல்சார் கொள்கை அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றம் போன்றவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பொதுவான சவால்கள் என்று கூறிய கிரிதர் அரமனே, இவற்றை எதிர்கொள்ள மேலும் அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications