மீண்டும் மோத வரும் சீனா- பூடான் டோக்லாம் பீடபூமியில் ராணுவம், பொதுமக்களை களமிறக்கியதால் பதற்றம்!
டெல்லி: பூடான் எல்லையில் சர்ச்சைக்குரிய டோக்லாம் பீடபூமி பகுதியில் சீனாவின் ராணுவம் பலப்படுத்தப்பட்டிருப்பதால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பூடான் தனி நாடாக இருந்தாலும் அதன் எல்லைகளை நமது ராணுவம்தான் கண்காணித்து வருகிறது. பூடானின் பல பகுதிகளை ஏற்கனவே சீனாவும் உரிமை கோரி வருகிறது.
பூடானின் டோக்லாம் பீடபூமி என்பது புவியியல் ரீதியாக முக முக்கியமான பகுதி. அரசியல் வரலாற்றில் இது கோழி கழுத்துப் பகுதி என்றழைக்கப்படும். டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்றிவிட்டால் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளும் சீனா வசமாகிவிடும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து.

டோக்லாம் மோதல்
ஆகையால் டோக்லாம் பீடம்பூமியை இலக்கு வைத்து பல ஆண்டுகளாக சீனா காய்நகர்த்தி வருகிறது. 2017-ம் ஆண்டு டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் டோக்லாம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பதற்றம் 73 நாட்கள் நீடித்தன.

மீண்டும் ஸ்கெட்ச் போட்ட சீனா
இந்நிலையில் டோக்லாமை அவ்வளவு எளிதாக விட்டுவிடப்போவதில்லை என சீனா கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. டோக்லாம் பகுதியில் அமோ சூ நதிக்கரையில் பிரம்மாண்ட கிராமம் ஒன்றையே சீனா ராணுவம் உருவாக்கி இருப்பதை செயற்கைக் கோள் வரைபடங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

இந்தியா கண்காணிப்பு
அதாவது டோக்லாம் பகுதியை விரைவாக வந்து சேருவதற்கு ஏற்ற வகையில்தான் இந்த குடியிருப்புகளை சீனா கட்டியிருக்கிறது. சீனாவின் இந்த குடியிருப்புகளில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரி பிராந்தியங்களை எளிதாகப் பார்க்க முடியும். டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் மலைகளை இணைக்கக் கூடியதும் சிலிகுரிதான்.

மத்திய வெளியுறவுத்துறை
இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த டோக்லாம் பீடபூமியை மிக நெருங்கி வந்து நிற்கிறது சீனா. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில் டோக்லாம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து. அதற்கேற்ப பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications