இந்தியாவில் வருகிறது கொரோனா வேக்சின் பூஸ்டர்.. விரைவில் அரசு அனுமதி? - டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் தகவல்!
டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் கொரோனா டோஸ்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பின் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 1,18,47,97,137 டோஸ்கள் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 77,25,86,570 பேருக்கு இந்தியாவில் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 41,22,10,567 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் இந்தியாவில் விரைவில் மூன்று டோஸ் பாலிசி கொண்டு வரப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. குறிப்பிட்ட வயதினருக்கு மூன்று டோஸ் கட்டாயம் என்று விதிமுறை கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

மூன்று டோஸ்
அதாவது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் மூன்றாம் டோஸ் பரிந்துரைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக இந்தியாவின் கொரோனா வேக்சின் ஆய்வுக்குழு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது இல்லாமல் நல்ல ஆரோக்கியம் கொண்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டமும் உள்ளது.

மூன்றாவது டோஸ் பூஸ்டர்
இது மூன்றாவது டோஸ் போல இருக்காது. ஏற்கனவே இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டர் போல செயல்படும். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பூஸ்டர் டோஸ்கள் போடப்படுகின்றன. அங்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை உயர்த்த பூஸ்டர் டோஸ்கள் போடப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவில் பூஸ்டர் கொரோனா டோஸ்கள் விரைவில் போடப்படலாம். ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பின் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் முழுமையான முடிவுகள், புள்ளி விவரங்களுக்காக காத்து இருக்கிறோம். எது சரியான பூஸ்டராக இருக்கும் என்று சோதித்து வருகிறோம். எவ்வளவு இடைவெளிக்கு பின் பூஸ்டர் போடுவது சரியாக இருக்கும் என்றும் ஆலோசனை செய்து வருகிறோம்.
Recommended Video

அறிவியல்
அறிவியல் ரீதியாக முடிவுகள் வந்த பின் இதில் முடிவு எடுப்போம். ரிவ்யூ மீட்டிங் நடத்தி அதில் முடிவுகளை எடுப்போம். பூஸ்டர் டோஸ் ஒன்றும் நாளையே மொத்த இந்தியாவிற்கும் போடப்பட மாட்டாது. அதனால் மக்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. இதற்கான ஆய்வுகள் முடிந்த பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications