இந்தியாவில் பைசர் & மாடர்னா தடுப்பூசி இறக்குமதி எப்போது? 2023 வரை காத்திருக்க வேண்டும்.. என்ன காரணம்
டெல்லி: அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், பல நாடுகளும் தடுப்பூசிகளுக்கு முன்னதாகவே ஆர்டர் அளித்துள்ளதால் இந்தியா தடுப்பூசிகளைப் பெற 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இதற்காக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை, இதனால் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி இறக்குமதி
பல மாநிலங்களில் தடுப்பூசி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

Array
அதேபோல அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்க நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தாலும், அவை வேகமாகப் பரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2 ஆண்டுகள் ஆகலாம்
இருந்தாலும்கூட பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை இந்தியா பெற இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல நாடுகள் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பெற ஆர்டர் அளித்துள்ளதால் இந்த காலதாமதம் ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி 95% வரையிலும், மாடர்னா தடுப்பூசி 94% வரையிலும் தடுப்பாற்றலை அளிப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள்
முன்னதாக டெல்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இந்த இரண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டன. ஆனால், இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி இறக்குமதி குறித்த ஆலோசனையை நடத்துவோம் எனத் தெரிவித்துவிட்டன. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தடுப்பூசி குறித்தும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications