5ம் தலைமுறை போர் விமானம்.. லட்டு மாதிரி ஆஃபர் கொடுத்த ரஷ்யா! இந்தியா இன்னும் யோசிக்குதே!
டெல்லி: இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானம் கிடையாது. ஆனால், சீனாவிடம் இருக்கிறது. அதேபோல சீனாவிடமிருந்து விரைவில் பாகிஸ்தானும் 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்கிவிடும். இப்படி இருக்கையில் இந்தியாவுக்கு 5ம் தலைமுறை போர் விமானங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும் தர ரஷ்யா முன் வந்திருக்கிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் இந்தியா எந்த முடிவையும் அறிவிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.
இந்தியாவிடம் இருப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானம் ரஃபேல்தான். இது 4.5ம் தலைமுறை விமானமாகும். 5ம் தலைமுறை விமானங்கள் இதை விட மேம்பட்டு இருக்கும். குறிப்பாக 5ம் தலைமுறை விமானங்களில் மறைந்திருந்து தாக்குதல் திறன் அதிகமாக இருக்கும். அதைப்போல வேகமும் கூடுதலாக இருக்கும். இப்படியான விமானங்களை இந்தியா உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையடைய 2030 வரை காலம் எடுக்கும் என்பதால், இந்தியாவுக்கு 5ம் தலைமுறை விமானங்கள் உடனடி தேவையாக இருக்கின்றன.

ரஷ்யா கொடுக்கும் ஆஃபர்
இந்த சூழலில்தான் ரஷ்யா நமக்கு விமானங்களை தர முன் வந்திருக்கிறது. அதனுடைய SU-57 ஐந்தாம் தலைமுறை விமானத்தை இந்தியாவில் முழுமையாக தயாரிப்பதற்கு ரஷ்யா ஒப்புக் கொண்டிருக்கிறது. வெறுமனே விமானத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் விமானத்தின் தொழில்நுட்ப தகவல்களையும் இந்தியாவுக்கு விற்க முன் வந்திருக்கிறது. இந்த சலுகை இந்தியாவினுடைய தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் ரஷ்யா கருதுகிறது.
5ம் தலைமுறை தொழில்நுட்பம்
இதெல்லாம் ஓகேதான். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதில் இந்தியாவுக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ரஷ்யாவுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானத்தை தயாரிக்கும் திட்டத்தில் இந்தியா வேலை செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக இரு நாடுகளும் சேர்ந்து தயாரிக்கும் 5ம் தலைமுறை விமானத்தில் வேகம் குறைவாக இருந்ததாகவும், மறைந்திருந்து தாக்கம் தொழில்நுட்பம் மற்றும் விமானங்களை விட ஒப்பிட்டு அளவில் குறைவாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கி இருந்தது.
நிபுணர்கள் எச்சரிக்கை
இப்படி இருக்கையில் ரஷ்யா தயாரித்திருக்கும் 5ம் தலைமுறை விமானம், எப்படி நம்பகமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல இப்போதைக்கு தொழில்நுட்ப தகவல்களை ரஷ்யா பகிர்ந்து கொள்வதாக சொன்னாலும், அந்த தகவல்களை முழுமையாக வழங்காது என்று முன்னாள் ஏர் மார்ஷல் அணில் சோப்ரா போன்ற நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதெல்லாம் ரஷ்யாவின் ஆஃபரை பரிசிலிக்க தடையாக இருக்கின்றன.
வேலைக்கு ஆகுமா?
ரஷ்யாவின் ஆஃபருக்கு முன்னரே, பிரான்ஸிடமிருந்து ரபேல் விமானங்களை அதிக அளவில் கொள்முதல் செய்ய இந்தியா ஆர்டர் கொடுத்து விட்டது. அப்படி இருக்கையில் புதிய 5ம் தலைமுறை விமானங்களை வாங்கும் அளவுக்கு இந்தியாவிடம் நிதி இருக்குமா என்பது கேள்விக்குறி.
மட்டுமல்லாது இந்தியா சுயமாக 5ம் தலைமுறை விமானங்களை (AMCA) உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் தற்போது ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்குவதன் மூலம் நம்முடைய சொந்தத் தயாரிப்பு விமானத்தில் பணிகள் தாமதமாக வாய்ப்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் காரணங்களால் ரஷ்யாவின் ஆஃபரை இந்தியா மறுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications