ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடல்- தூதர்,அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்!
டெல்லி: ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் வசமான நிலையில் அந்த நாட்டுக்கான இந்திய தூதரகம் மூடப்பட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
Recommended Video
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை நடத்தினார். இதனால் 20 ஆண்டுகளாக தாலிபான் (தலிபான்கள், தாலிபன்கள்) தங்களது வாலை சுருட்டிக் கொண்டு இருந்தனர்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறின. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையும் படிப்படியாக தங்களது வசம் கொண்டு வந்தனர்.

சரணடைந்த அரசு படைகள்
அமெரிக்கா படைகள் இருந்த வரை ஆப்கானிஸ்தான் ராணுவமும் தாலிபான்களுடன் மோதியது. ஆனால் அமெரிக்கா படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே ஆப்கான் படைகள் சரணடைந்தன. ஆப்கான் ராணுவ வீரர்கள், தாலிபான்களுடன் இணைந்தும் கொண்டனர். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ஆப்கானை விட்டு தப்பி ஓடி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் தாலிபான்கள் எளிதாக முன்னேற முடிந்தது. இந்த நிலையில்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 34 மாகாணங்களும் தாலிபான்கள் வசமாகிவிட்டன.

தப்பி ஓடிய அதிபர்
இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டே தப்பி ஓடினார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேபோல் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் யார் என்பதை விரைவில் தாலிபான்கள் அறிவிக்கவும் உள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சிக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ரஷ்யாவோ பொறுத்திருந்து பார்த்து முடிவெடுப்போம் என கூறியுள்ளது.

உலகை பதற வைக்கும் காட்சிகள்
மேலும் தாலிபான்கள், இஸ்லாமிய கடும் போக்காளர்கள்; இஸ்லாமிய மதசட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவர்; இதனால் தங்களது உயிருக்கு ஆபத்து என கருதும் பல்லாயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அந்த நாட்டைவிட்டு தப்பி ஓட காபூல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் இன்னமும் சில ஆயிரம் அமெரிக்கா படைகள் இருக்கின்றன. காபூல் விமான நிலையத்தில் காணும் வீடியோ காட்சிகள் உலகை அதிர்ச்சி அடைய வைத்து வருகின்றன. பறக்கும் விமானத்தில் தொங்கியபடி பயணித்து நடுவானில் இருந்து விழுந்து மாண்டவர்கள்.. சந்தை கடைவீதி போல அமெரிக்க ராணுவ விமானத்தில் கடுமையான நெரிசலுடன் நின்றபடி பயணிக்கும் ஆப்கானியர்கள்.. பல அடி உயர விமான நிலைய சுவர்களை ஏறி குதிக்க முயற்சிக்கும் ஆப்கானியர்கள்- அவர்கள் மீது துப்பாக்கிச் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு என்கிற காட்சிகள் உலகத்தை பதற வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய தூதரகம் மூடல்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரகம் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் அனைத்து தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்தியர்கள், இந்திய தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன. இதனிடையே 120 இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்ட விமானப் படை விமானம், குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான படை தளத்தை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தாமல் ஈரான் சென்று அங்கிருந்து மாற்று வான்வழிப் பாதையை பயன்படுத்தி வருகின்றன. இதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்காக இ விசா முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications