இந்தியா-பாக். இடையே உச்சக்கட்ட மோதல்! போரை தவிர்க்க வழி என்ன? இதுதான் தீர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்திருக்கிறது. விரைவில் போர் மூளும் சூழல் இருக்கும் நிலையில், போரை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே தீர்வை எட்ட முடியும். போர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

pakistan india Pakistan

போருக்கான காரணம் என்ன?:

கடந்த 22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு முன்னரும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் இதனை கண்டும் காணாமல் இருந்ததுதான் போருக்கான தொடக்கப்புள்ளி. பஹல்காம் தாக்குதலை போல ஏராளமான தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தினார்கள் என்பதை சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால் பாகிஸ்தான் இப்போது வரை இதை ஊக்குவித்து வருகிறது என்பதுான் சர்ச்சைக்குரிய விஷயம். ஆக அமைதிக்கான முதல் அடியை பாகிஸ்தான்தான் எடுத்து வைக்க வேண்டும்.

பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்?:

இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எனவே நாங்கள் இனி எங்கள் நாட்டில் தீவிரவாத செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டோம். தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும். மட்டுமல்லாது இதற்காக உறுதியான சட்டங்களை இயற்றி, அதை கடைபிடிக்கவும் செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பிக்கை வரும்.

இந்தியா செய்ய வேண்டியது என்ன?:

பாகிஸ்தான் கொடுத்த வாக்குறுதிக்கு நேர்மையாக நடக்கும் பட்சத்தில் பதற்றத்தை குறைக்கும் விதமாக, அந்நாட்டுடன் வர்த்தகத்தை பழைய மாதிரி மேற்கொள்ள வேண்டும். விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகள் அதிக அளவில் இரு தரப்பிலும் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. இதனை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும். இது இரு நாடுகளுக்கு இடையே எழுந்த பதற்றத்தை தணிக்கும்.

இரு நாடுகளும் செய்ய வேண்டியது என்ன?:

தங்கள் எல்லையில் குவிக்கப்பட்ட அதிக அளவிலான ராணுவ வீரர்களை இரு நாடுகளும் திரும்ப பெற வேண்டும். பாதுகாப்புக்கு ராணுவ வீரர்கள் தேவைதான். ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் வீரர்களை அதிக அளவில் குவிக்கக்கூடாது. அதேபோல இரு நாடுகளும் எதிரி நாடுகளுக்கான விசாவை ரத்து செய்திருக்கின்றன. மீண்டும் விசா வழங்கப்பட வேண்டும். இப்படி செய்வது இரு நாட்டின் பொதுமக்களிடைய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இதை செய்யும்போது, போலி தகவல்கள் பரவாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக சோஷியல் மீடியாக்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல போர் வெறியை தூண்டும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இரு நாட்டின் ஒற்றுமையை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகள், கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும்.

இவையெல்லாம் செய்யும்போது போர் நடக்காது. அகதிகள் உருவாகமாட்டார்கள், பொதுமக்கள் உயிரிழக்க மாட்டார்கள், இளைஞர்கள் வேலையை இழக்கமாட்டார்கள், பொருளாதார சரிவு ஏற்படாது. போர் அழிக்க மட்டுமே செய்யும். அன்பு புதியவற்றை உருவாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+