டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூன்.. மார்ஸ்.. அடுத்து கடல்.. கடலுக்கு அடியில் குழாய் போட்டு கனிமங்களை எடுக்கும் இந்தியா!

இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய களமிறங்கி உள்ளது.

இன்னும் சில வாரங்களில் ஹாலிவுட்டின் டிசி நிறுவனத்தில் இருந்து அக்குவா மேன் என்று ஹாலிவுட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் ராஜ்ஜியம் பற்றித்தான் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா உண்மையாக இந்திய பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் ராஜ்ஜியத்தை வெளியே எடுக்க திட்டமிட்டு உள்ளது.

எடுக்க போகிறது

எடுக்க போகிறது

அதன்படி இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் உள்ள கனிமங்களை இந்தியா எடுக்க இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இதற்கான பணிகளை தொடங்க உள்ளது. இந்திய பெருங்கடலில் 72 சதுர கிலோ மீட்டர் வரை இப்படி கனிமங்களை எடுக்க இந்திய சர்வதேச கடற்படை அதிகார சபையிடம் அனுமதி வாங்கி உள்ளது.

என்ன இருக்கிறது

என்ன இருக்கிறது

கடலுக்கு அடியில் கோடிக்கணக்கில் கனிமங்கள், தனிமங்கள், சேர்மங்கள், தாதுக்கள், பூமிக்கு மேல் இல்லாதா அறிய பொருட்கள் இருக்கிறது. இந்தியா தற்போது இதைத்தான் எடுக்க உள்ளது. முக்கியமாக கடலுக்கு அடியில் காப்பர், இரும்பு, தங்கம் ஆகியும் அதிகம் இருக்கிறது. இதை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

எப்படி எடுக்கும்

எப்படி எடுக்கும்

இதை எடுப்பது பெரிய கடினம் கிடையாது ஒன்றும் கூறப்படுகிறது. 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் பெரிய குழாய்களை செலுத்தி, தாதுக்களை உறிஞ்ச போகிறது. இல்லையென்றால் அதற்கு என்று தனியாக சிறப்பு கருவிகளை பொருத்திய நீர் மூழ்கி கப்பல்களை கடலுக்கு அடியில் அனுப்ப போவதாக தெரிவித்து உள்ளது.

என்ன பயன்

என்ன பயன்

இதனால் இந்தியாவின் உற்பத்தி திடீர் என்று அதிகம் ஆகும் என்று கூறப்படுகிறது. உணவுப் பொருட்கள், லேப்டாப் தொடங்கி பேஸ்மேக்கர் வரை இதன்மூலம் உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆசியாவின் இதனால் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெரும் என்று கூறப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் எப்படி

உலக நாடுகள் எப்படி

உலக நாடுகள் ஏற்கனவே இதை செய்ய தொடங்கிட்டது. ஆசியாவில் சீனா பெரிய அளவில் கடலில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு இருக்கிறது. அதேபோல் ஜப்பான்னும் கடலில் இருந்து பொருட்களை வைத்து பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டு உள்ளது. தற்போது இந்தியா அதில் களமிறங்கி உள்ளது.

English summary
Plan for huge Sea Mining: India plans deep dive into Indian ocean for minerals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X