ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்? ஆக்ஷனில் இறங்குகிறதா ராணுவம்.. நிபுணர்கள் பரபர தகவல்!
டெல்லி: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தான் ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள் என்றும் இதனால், அதன் முதுகெலும்பை உடைக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ராணுவ ஆக்ஷனை எடுத்து அந்த பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐநா வலியூறுத்தியுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நடவடிக்கை
இதனால், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளூமோ என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது; -
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துதான் ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தளங்களும் ஆக்டிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. முதுகெலும்பை உடைக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ராணுவ ஆக்ஷனை எடுத்து அந்த பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம்.
குவாதர் துறைமுகம்
சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்து இருப்பது இந்தியாவுக்கு ஒரு சாதகமான விஷயம். இதற்கு முன்பாக இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் மட்டுமே போர் என்பது நடைபெற்றுள்ளது. இந்த முறை, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு எல்லைப்பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம் மற்றும் அந்த மாகாண விமானப்படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கலாம்..
சுகோய் ரக போர் விமானங்கள்
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானின் ரூடாகி, இந்திய விமானப்படையின் சீக்ரெட் தளம் உள்ளது. இந்த தடத்தில் சுகோய் ரக போர் விமானங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தளத்தில் இருந்து பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளை தாக்க முடியும்" என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கடும் டென்ஷனில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக விளங்கிய பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கராவாதிகளை விட மாட்டோம் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
பாகிஸ்தான் பாலைவனம் ஆகும்
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை நிறுத்த இந்தியா முடிவு எடுத்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்படால் பாகிஸ்தான் பாலைவனம் ஆகும்.
ஏனெனில் அந்த நாட்டின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. இதனால், சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் என்ன கதி ஆவோமோ என்பது பாகிஸ்தானின் அச்சமாக இருக்கிறது. இதனால், இந்தியாவுக்கு எதிராக அடாவடியாக பேசி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications