வெளிநாடுகளுக்கான சிறு பார்சல்கள் அனுப்புவது இன்று முதல் நிறுத்தம்! இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
புதுடெல்லி: ஜனவரி 1 ஆம் தேதி முதல், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சில பதிவு செய்யப்பட்ட பார்சல் சேவைகளை இந்தியா போஸ்ட் நிறுத்தியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அஞ்சல் துறை தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அஞ்சல் சங்கத்தின் புதிய விதிகளின்படி, சிறிய உறைகளில் வெளிநாடுகளுக்குப் பொருட்களை அனுப்பும் சிறு பார்சல் சேவை ஜனவரி 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இனி கடிதங்களையும் ஆவணங்களையும் மட்டுமே சிறிய உறைகள் வழியாக அனுப்ப முடியும்.

பார்வையற்றோருக்கான அஞ்சல் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பொருட்கள் அடங்கிய உறைகளைத் தரைவழி, கடல்வழி, அல்லது விமான அஞ்சல் சேவை மூலம் அனுப்பும் வசதி இனி இருக்காது.
முன்பிருந்த சேவைகளில் பார்சல்களைக் கண்காணிக்க முடியாததாலும், விநியோகத்தில் தாமதங்கள் ஏற்பட்டதாலும் அஞ்சல் துறை இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ஏற்றுமதிப் பொருட்கள் அல்லது சரக்குகளை ஐ.டி.பி.எஸ். (International Tracked Packet Service) என்ற கண்காணிப்பு சேவை மூலம் அனுப்பலாம்.
இந்தச் சேவை மூலம் பார்சல்களை அவை செல்லும் வழியெங்கும் கண்காணிக்க முடியும். சுங்க மற்றும் பாதுகாப்பு விதிகளை எளிதாக முடித்து, பார்சல்கள் விரைவாகச் சென்றடையவும் இது உதவும். மேலும், இந்த புதிய சேவை ஏற்றுமதியாளர்களுக்கும் இ-காமர்ஸ் விற்பனையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றம் குறித்து அஞ்சல் துறை ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறைக்கு மாற வாடிக்கையாளர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவை நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கத்துறை வெளியிட்ட புதிய, தெளிவற்ற அறிவிப்பே இந்த திடீர் முடிவுக்குக் காரணம். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினரும், இங்கிருந்து அவர்களுக்குப் பொருட்களை அனுப்பும் உறவினர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 50% வரி விதித்து பொருளாதார நிலையைச் சிக்கலாக்கி வந்த டிரம்ப் நிர்வாகம், 100 அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹9,000) அதிகமான இந்தியப் பொருட்களுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. ₹70,000 (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் ரத்து செய்யப்பட்டது. மேலும், அனைத்து தபால் பொருட்களுக்கும் மதிப்புக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்; 100 டாலர் வரம்புக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பின் தெளிவின்மை காரணமாக, அமெரிக்க விமானங்களில் இந்தியப் பார்சல்களை அனுமதிக்கக் கூடாது என அந்நாட்டுச் சுங்கத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய தபால் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பால், நாடு முழுவதும் அமெரிக்காவுக்கான பார்சல் சேவை கடந்த ஆகஸ்ட் முதல் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் உட்பட அஞ்சல் துறைக்குச் சொந்தமான 200 மையங்களில் இந்நிலை அமலுக்கு வந்தது.
தமிழகத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள உறவினர்களுக்கு மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ எடையுள்ள பார்சல் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ₹17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மற்றும் ஸ்பீட் போஸ்ட் என இரு பிரிவுகளில் பதிவு நடைபெறும்.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால், சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்குப் பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications