டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“இந்தி@ஐநா” இந்தி மொழியை ஊக்குவிக்கனுமாம்! 8 லட்சம் அமெரிக்க டாலர்! ஐநாவிடம் வழங்கிய இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையிலும், ஐக்கிய நாடுகள் சபை குறித்த செய்திகளை இந்தி
மொழியில் வெளியிடக் கோரி, அந்த அமைப்பிடம் இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

"இந்தி@ஐநா" என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை விரிவுபடுத்த இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தி படிச்சுட்டு கட்டிட வேலைதான் செய்யுறாங்க.. எங்க முன்னேறி இருக்காங்க? தயாநிதி மாறன் பொளேர் இந்தி படிச்சுட்டு கட்டிட வேலைதான் செய்யுறாங்க.. எங்க முன்னேறி இருக்காங்க? தயாநிதி மாறன் பொளேர்

இந்தி மொழி

இந்தி மொழி

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தி அட் ஐநா திட்டத்திற்காக இந்தியா 8,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் அளித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காகவும், ஐ.நா. பற்றிய தகவல்களை இந்தியில் பரப்புவதற்காக 2018ஆம் ஆண்டு 'ஹிந்தி@ஐநா' திட்டம் தொடங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்தத் திட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் இந்தி மொழிக்கான பொது அணுகலை அதிகரிக்கவும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஹிந்தி பேசும் மக்களிடையே உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது

ஊக்குவிக்க முயற்சி

ஊக்குவிக்க முயற்சி

2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறையுடன் (DGC) இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், இந்த முக்கியமான திட்டத்திற்கு கூடுதல் பட்ஜெட் பங்களிப்பை இந்தியா வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியில் ஐநா செய்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மற்றும் ஐநா முகநூல் ஹிந்தி பக்கம் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.

8 லட்சம் டாலர் நிதி

8 லட்சம் டாலர் நிதி

மேலும் ஐக்கிய நாடுகள் குறித்த செய்திகள் ஐநா வானொலியில் இந்தியில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது.இதற்காக ஐநா அவையின் ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்புத்துறை துணை இயக்குனர் மிட்டா கோசலிடம் 8 லட்சம்அமெரிக்க டாலருக்கான காசோலையை ஐநா வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி மொழிக்கு கூடுதல் பங்களிப்பை அளிக்கும் என ஐநா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
India has provided US $ 8 lakh in financial assistance to promote the Hindi language and to publish news about the United Nations in Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X