டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களுக்கு நற்செய்தி.... இந்தியாவில் 8 மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள்... அரசு முடிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள் வழங்க உளளதாக தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர்களின் குழுவின் தலைவரான வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.

பல்வேறு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு இருக்கும் நிலையில் இதற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

India Readies for 60 million corona doses Shots in 8 Month

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் ஓரளவு பாதிப்பு குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி அந்த மருந்துகளை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வாக்சின்... மாஸ் காட்டும் டிரம்ப்! அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வாக்சின்... மாஸ் காட்டும் டிரம்ப்!

எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள் வழங்க முடிவு செய்துளளதாக தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர்களின் குழுவின் தலைவரான வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் இந்தியா முழுவதும் 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகளை சேமித்து பாதுகாக்க 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (36 முதல் 48 ° F) வரை வெப்பநிலையுடன் கூடிய குளிர்சாதன சேமிப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த உள்ளது. சீரம், பாரத், ஜைடஸ், மற்றும் ஸ்பூட்னிக் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு சாதாரண குளிர் சேமிப்பு நிலையே போதுமானது. ஆனால்,பைசரின் தடுப்பூசிக்கு சேமிப்பக நிலை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே தேவை. இதன் பிரத்யேகமான சேமிப்பு நிலைகள் உருவாக்கப்படும்.

பல்வேறு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு இருக்கும் நிலையில் இதற்கு மருந்து கட்டுப்பட்டு வாரியம் "மிக விரைவில் ஒப்புதல் அளிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
தடுப்பூசியின் அரசு விலை நிர்ணயம் குறித்து முறையான பேசசுவார்த்தைகள் இன்னும் நடக்கவில்லை. தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து உறுதியான கொள்முதல் இன்னும் பிறப்பிக்கபடவில்லை என்கிறார் அவர்.

English summary
VK Paul, Chairman of the Committee of Experts on Vaccine Management, said that 600 million corona doses will be provided in India in the next six to eight months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X