இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123; 24 மணிநேரத்தில் 3,879 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உலக நாடுகளிலேயே மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் 3,879 ஆகவும் உள்ளது.
உலக நாடுகளில் இந்தியா, பிரேசிலில்தான் கொரோனா இன்னமும் கோரத்தாண்டவமாடுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 16,25,20,846.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14,03,82,776. உலகில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,70,773. உலக அளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் 3,26,123 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் 3,26,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 3,879 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,43,72,243. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,66,229.

36,79,691 பேருக்கு சிகிச்சை
தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,79,691. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,04,26,323. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது.

கர்நாடகாவில் அதி உச்சம்
ஆனால் நேற்று கர்நாடகாதான் ஒருநாள் பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது. கர்நாடகாவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 41,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் 39,923 பேருக்கும் தமிழ்நாட்டில் 31,892 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியானது.

இந்தியாவில் ஒருநாள் மரணங்கள்
மகாரஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 373 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 311 பேரும் கொரோனாவால் மடிந்தனர். தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று கொரோனாவுக்கு 288 பேர் உயிரிழந்தனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications