இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 40% கிடுகிடு அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 683,644,472; உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,829,253. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்கள் எண்ணிக்கை 656,629,846. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 71,615 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்கொரியாவில் அதிகபட்சமாக 13,134 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக நாடுகளில் நேற்று மட்டும் 414 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ஜெர்மனியில் அதிகபட்சமாக 100 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் மரணம் அடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1,000; 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு. நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக இருந்தது.
இந்த நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 40% அளவுக்கு கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 13,509 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,375 ஆக இருந்தது. கடந்த 6 மாதங்களில் தற்போதுதான் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள் எண்ணிக்கை 14. மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,30,862. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,12,692. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 4,41,68,321 பேர்.
கொரோனா பாதிப்பு தொடர்பான மத்திய அரசு அறிவிக்கை: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 15,784 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 13,509 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம்.கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,68,321 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்பு விகிதம் 2.73% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71%. இதுவரை மொத்தம் 92.14 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,10,522 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications