தவறான ஆதிகால செயல்களை குப்பையில் வீச வேண்டும்.. முத்தலாக் மசோதா வெற்றி பற்றி மோடி டிவிட்!
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ஏற்றுக்கொள்ளப்படாத ஆதி கால செயல்களை குப்பையில் வீச வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்புக்கு இடையில் தற்போது முத்தலாக் தடை சட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லோரும்
இந்த மசோதா வெற்றி அடைந்தது பாஜக கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ராஜ்யசபாவில் போதிய பெரும்பான்மை இன்றியும் கூட மசோதாவை பாஜக வெற்றிகரமாக தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த 30 எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததால் மசோதா நிறைவேறி உள்ளது .
|
மோடி சந்தோசம்
இது குறித்து தற்போது பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். அதில், ஏற்றுக்கொள்ளப்படாத ஆதி கால செயல்களை குப்பையில் வீச வேண்டும். கடைசியில் அது நடந்துவிட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வரலாற்று ரீதியாக செய்யப்பட்ட தவறுகளை தற்போது பாராளுமன்றம் சரி செய்துள்ளது. பாலின சமத்துவத்திற்கான வெற்றி இது. முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
|
நன்றி
மசோதாவிற்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும், அனைத்து கட்சி எம்பிக்களுக்கு நன்றி. இரண்டு அவையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இந்த முயற்சியும், வெற்றியும் எப்போதும் வரலாற்றில் நினைவு கூறப்படும்.
|
என்ன பெண்கள்
இந்த நிமிடத்தில் இந்த சட்டத்திற்காக போராடிய இஸ்லாமிய பெண்களுக்கும் நன்றி. தைரியமான இஸ்லாமிய பெண்கள் இதை எதிர்த்தனர். அவர்கள் இந்த தவறான முத்தலாக் முறை மூலம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் அவர்களுக்கு சமஉரிமையை வழங்கி, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை உறுதிப்படுத்தும், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications