ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தான் ராணுவ தளத்தில் ஏற்பட்ட கடும் சேதம்! வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவ தளம் சேதம் அடைந்ததை வீடியோ ஆதாரங்களுடன் இந்தியா இன்று காட்டியது. செய்தியாளர்களுக்கு இன்று பிற்பகலில் பேட்டி அளித்த ஏர்மார்ஷல் ஏகே பாரதி, ராவல் பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் வெடி தாக்குதலுக்கு பிறகு பயங்கரமாக தீ பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவதிகளுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது. இந்தியா எடுத்த பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தானில் பலத்த சேதம் ஏற்பட்டது.

வீடியோ ஆதாரம்
பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளன. இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏர் மார்ஷல் ஏகே பாரதி ராவல் பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் பயங்கர வெடிப்பு மற்றும் அதை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான புகைப்படத்தை காட்டினார்.
இஸ்லாமாபாத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இந்த விமான தளம் உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அருகே இந்த விமான தளம் உள்ளது.
பின்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார் கான் விமான தளத்தின் ரன்வேயில் பயங்கர சேதம் ஏற்பட்டது தொடர்பான வீடியோவினையும் காட்டினார். மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளுக்கு எதிராகவே ஆயுதப்படை சண்டையிட்டது எனவும் ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து மோதலை பெரிதுபடுத்தியது என்று கூறினார்.
இயல்பு நிலை திரும்பியது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு கோபம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்கட்டுபாட்டு பகுதிகளில் அத்துமீறியது. சிறு பீரங்கிகளால் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. இதையடுத்து, இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்க முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
#WATCH | Delhi | Air Marshal AK Bharti presents the composite picture of targets engaged by the Indian Air Force during #OperationSindoor pic.twitter.com/hBNJAFyLTD
— ANI (@ANI) May 12, 2025
40 வீரர்கள் உயிரிழப்பு
இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் குறித்துப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பின் போது பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏர் மார்ஷல் ஏகே பாரதி கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். குருத்வார் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதன்பிறகே, இந்திய ராணுவம், பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்ட்து. கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் 35 முதல் 40 வீரர்கள் உயிரிழந்து இருப்பார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications