கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனா...இந்த ஆண்டு...
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஓராண்டிற்குள் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்தியா வந்த கேரளாவைனச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதல் முதலில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் பரவுவதை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு, தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.

உயர்ந்தது எப்போது :
2020 ஏப்ரல் வரை இந்தியாவில் வெகு சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் மே மாதம் துவங்கி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயரத் துவங்கியது. கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது.

உச்சம் தொட்ட கொரோனா :
இந்த பாதிப்பானது செப்டம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்டியது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பிக்குள்ளானது மக்களிடையே பீதியை அதிகரித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கின.

7 மாதங்களில் குறைந்த கொரோனா :
ஆனால் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைய துவங்கியது. இம்மாத துவக்கத்தில் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டும் பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் நேற்று நாள் மேலும் குறைந்து 13,083 பேர் மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் குறைவு :
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைவு தான். இதுவரை இந்தியாவில் 1.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,54,147 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது. இந்தியாவில் பலருக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தும் பணி :
உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16 ம் தேதி துவங்கப்பட்ட தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் 30 கோடி பேருக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications