இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2000-த்தை நெருங்குகிறது! 24 மணிநேரத்தில் 1,805 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000-த்தை நெருங்குகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,805 ஆக பதிவாகி உள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1890 ஆக இருந்தது. கடந்த 210 நாட்களுக்கு பின்னர் அதிகமான தொற்று பதிவு இது. கடந்த ஒரு வாரத்தில் 78% பாதிப்பு அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நாட்டி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1988 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியது. தற்போது நாட்டில் கொரோனாவுக்கு 10,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 134 நாட்களுக்கு பின் அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 1,743 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 10,300 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,64,815 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.19% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.39% இதுவரை மொத்தம் 92.10 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 56,551 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications