இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-193 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக அளவில் இங்கிலாந்தில் நேற்று 34,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு
ரஷ்யாவில் நேற்று மட்டும் 962 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று 517 பேரும் மெக்சிகோவில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதிலும் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடரவே செய்கிறது.

24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 193 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 10,691 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 85 பேர் கேரளாவில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 21,563 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நேற்று மட்டும் 46 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 3,32,93,478 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,50,782 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் நாட்டில் 46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஒப்பீட்டளவில் குறைவு
கடந்த 7 மாதங்களை ஒப்பிடுகையில் வாராந்திர கொரோனா தொற்று பதிவு கணிசமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 12% குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் முதல் வாரத்தில்தான் நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000க்கும் குறைவாக இருந்தது. தற்போது அந்த நிலைமைக்கு திரும்ப தொடங்கி இருக்கிறது. அதேபோல் கொரோனா மரணங்களும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த மார்ச் 15-21 வாரத்தை ஒப்பிடுகையில் கொரோனா மரணங்கள் 4.5% குறைந்துள்ளன.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications