இந்தியாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 28,591 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 14.3% குறைவானதாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் சனிக்கிழமை காலை ஒருநாள் கொரோனா பாதிப்பு 33,376 ஆக பதிவாகி இருந்தது. ஆனால் இன்று காலை 28,591 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,36,921 ஆக உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 34,848 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,24,09,345. அதாவது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 97.51% ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்தம் 338 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,42,655.பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மிக அதிகபட்சமாக கேரளாவில் 20,487 என ஒருநாள் பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 1639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 1,145 பேருக்கும் மிசோரமில் 1089 பேருக்கும் கர்நாடகாவில் 801 பேருக்கும் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 88% கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்திய அளவில் கேரளாவின் பாதிப்பு 71.66% ஆகும்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 72,86,883 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 73,82,07,378.பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
Recommended Video
இந்தியாவில் சனிக்கிழமையன்று காலையில் 33,376 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. மேலும் 32,198 பேர் நேற்று குணமடைந்திருந்தனர். கடந்த 12 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு , 3 சதவீதத்துக்கும் குறைவாக (2.10 சதவீதம்) உள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 76 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications