இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா - கேரளா- 300 பேருக்கு பாதிப்பு- தமிழகம் 12 கேஸ்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று புதன்கிழமை) மட்டும் 358 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:

மாநிலங்கள் வாரியாக ஒருநாள் கொரோனா பாதிப்பு (மொத்தம் 358)
கேரளா - 300
கர்நாடகா -13
தமிழ்நாடு -12
குஜராத் -11
மகாராஷ்டிரா- 10
தெலுங்கானா - 5
கோவா -4
புதுச்சேரி- 2
உ.பி. -2
ஆந்திரா -1
அஸ்ஸாம் -1
ஹரியானா -1
டெல்லி- 1
காஷ்மீர் -1
ம.பி- 1
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் -ஆக்டிவ் கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 2669.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்:
கேரளா -2341
கர்நாடகா - 92
தமிழ்நாடு 89
மகாராஷ்டிரா 45
குஜராத் 23
புதுச்சேரி 22
கோவா 19
தெலுங்கானா 14
இந்தியாவில் இதுவரை கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,33,327.
முன்னதாக டெல்லியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவருடன் இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் ஆகியோரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அலோ லிபாங், உத்தரப்பிரதேச துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக், உத்தராகண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர், தினேஷ் குண்டுராவ், சுகாதாரத்துறை அமைச்சர் (கர்நாடகா); அனில் விஜ், சுகாதாரத்துறை அமைச்சர் (ஹரியானா); திருமதி வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் (கேரளா), திரு விஸ்வஜித் பிரதாப்சிங் ரானே, சுகாதாரத்துறை அமைச்சர் (கோவா); கேஷப் மஹந்தா, சுகாதாரத்துறை அமைச்சர் (அசாம்), திரு பன்னா குப்தா, சுகாதாரத்துறை அமைச்சர் (ஜார்கண்ட்); டாக்டர் பல்பீர் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் (பஞ்சாப்); சவுரப் பரத்வாஜ், சுகாதார அமைச்சர் (டெல்லி); டாக்டர் (கர்னல்) தானி ராம் ஷாண்டில், சுகாதாரத்துறை அமைச்சர் (இமாச்சலப் பிரதேசம்); பேராசிரியர் டாக்டர் தானாஜிராவ் சாவந்த், சுகாதாரத்துறை அமைச்சர் (மகாராஷ்டிரா); தாமோதர் ராஜநரசிம்ஹா, சுகாதாரத் துறை அமைச்சர் (தெலங்கானா); டாக்டர் சபம் ரஞ்சன், சுகாதாரத்துறை அமைச்சர் (மணிப்பூர்); நிரஞ்சன் பூஜாரி, சுகாதாரத்துறை அமைச்சர் (ஒடிசா); ரங்கசாமி, முதலமைச்சர் (புதுச்சேரி) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொவிட் -19-ன் புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார், குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொவிட் தொற்று ஒழியவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிய அவர் அறிகுறிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
மத்திய அரசு தரப்பில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பர் 6 அன்று 115 லிருந்து இன்று 614 ஆக கடுமையாக உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 92.8% பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும், இது லேசான நோயைக் குறிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதங்களில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பிற மருத்துவ காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications