இந்தியாவில் சற்று குறையும் ஒருநாள் கொரோனா பாதிப்பு... 39,070 பேருக்கு தொற்று உறுதி; 491 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 491 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,29,86,864 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42,99,735 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 1 லட்சத்தைத் தாண்டியதாக ஒருநாள் பாதிப்பு இருந்தது. இது நேற்று சரிபாதியாக குறைந்தது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 68,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் வெகுவாக குறைந்தது. அங்கு நேற்று 320 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
பிரேசிலில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிரேசிலில் ஒருநாள் பாதிப்பு 43,033 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 1,275 ஆகவும் இருந்தது. ரஷ்யாவில் நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 793 பேர் உயிரிழந்தனர்.
ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டியதாக இருந்த பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,19,34,455.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 491 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,27,862 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 43,910 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாட்டில் மொத்தம் 3,10,99,771 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் என்பது 97.39% ஆக இருக்கிறது.
நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,06,822. இது மொத்த பாதிப்பில் 1.27% ஆகும். இந்தியாவில் நேற்று மட்டும் 55,91,657 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 50.68 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் கேரளாவில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் நேற்று 20,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் மிக அதிகமாக கேரளாவில்தான் நேற்று மட்டும் 137 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் நேற்று 6,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் நேற்று 128 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 1969 பேருக்கும் ஆந்திராவில் 1908 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் 29 பேரும் ஆந்திராவில் 23 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகாவில் 1610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் மொத்தம் 32 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அஸ்ஸாமில் நேற்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மணிப்பூரில் 699, மேகாலயாவில் 524, மிசோரமில் 722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications