இந்தியாவில் 24 மணிநேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா பாதிப்பு- 535 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 535 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தோனேசியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா மரணங்கள் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் நேற்று ஒருநாளில் 535 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.13 கோடியாக உள்ளது. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,20,551 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,972 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,43,138 ஆகும்.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4,08,212. நாட்டில் இதுவரை மொத்தம் 43,31,50,864 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன












Click it and Unblock the Notifications