இந்தியாவில் பாதிப்பு கிடுகிடு உயர்வு- 24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உக்கிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,28,98,689 ஆகும். உலகின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27,13,580. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா வருகிறது.

 24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு பாதிப்பு

24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,15,55,284 ஆக அதிகரித்துள்ளது.

 கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

24 மணிநேரத்தில் 188 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 1,59,558 ஆக உயர்ந்திருக்கிறது.

 குணமடைந்தவர்கள் விவரம்

குணமடைந்தவர்கள் விவரம்

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,653 பேர் மீண்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,11,07,332.

 ஆக்டிவ் கேஸ்கள்- தடுப்பூசி

ஆக்டிவ் கேஸ்கள்- தடுப்பூசி

தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 2,88,394. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,20,63,392.

 மகாராஷ்டிராவில் அதிகம்

மகாராஷ்டிராவில் அதிகம்

மாநிலங்களைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான நிலைமை உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் புதியதாக 25,681 பேருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, குஜராத், ம.பி., தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+