இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 412! 3 பேர் உயிரிழப்பு; கேரளாவில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 3096
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 412 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700,304,277. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,960,191. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 671,511,719..
இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் மொத்தம் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த 3 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 53,3337. இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44472153.
இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 412. இதில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 293. கொரோனாவால் உயிரிழந்தோர் 3 பேர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்கள் மொத்த எண்ணிக்கை 4170.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்:
கேரளா- 3096
கர்நாடகா - 436
மகாராஷ்டிரா - 168
தமிழ்நாடு- 139
குஜராத் - 56
தெலுங்கானா -55
கோவா- 37
டெல்லி - 34
ஆந்திரா- 29
ராஜஸ்தான் - 27
புதுச்சேரி- 20
உ.பி- 16
மேற்கு வங்கம் 12
JN1 கொரோனா வைரஸ்: ஜே.என்.1 (JN1) வைரஸ் அதிகமான பாதிப்பு உள்ள மாநிலம் கர்நாடகா. இம்மாநிலத்தில் மொத்தம் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெங்களூரில் மட்டும் 20 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் வேளாண் அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications