இந்தியாவில் மிகவேகமாக அதிகரிக்கும் கொரோனா- 24 மணிநேரத்தில் 43,846 பேருக்கு பாதிப்பு உறுதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகமிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 197 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,34,35,786 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27,22,091,
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,33,602 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 43,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இந்தியாவில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,99,130 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா மரணங்களும் அதிகரிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 197 பேர் மரணம். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,59,755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பிடியில் குணமடைந்தவர்கள்
கடந்த 24 மணிநேரத்தில் 22,956 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11,30,288 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,09,087; இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 4,46,03,841.

மகாராஷ்டிராவில் உச்சம்
மாநிலங்களைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 27,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கேரளாவில் 2,078 பேருக்கும் கர்நாடகாவில் 1,798 பேருக்கும் குஜராத்தில் 1,565 பேருக்கும் புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியானது.

பஞ்சாப்- தமிழகம்
பஞ்சாப் மாநிலத்தில் 2,578, மத்திய பிரதேசத்தில் 1,308, சத்தீஸ்கரில் 1,273 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.












Click it and Unblock the Notifications