நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 45,892 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,291 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,07,09,557 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் 2,98,43,825 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 817 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,05,028 பேர் மரணமடைந்துள்ளனர் .
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 4,60,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,48,47,549 டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 40 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் புது புது பெயருடன் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்பணர்வுடன் இல்லாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்து மீண்டுமொரு பொது முடக்கத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications