இந்தியாவில் நேற்று 6,822 பேருக்கு கொரோனா பாதிப்பு- 220 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமையன்று மொத்தம் 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா அடுத்த கட்ட அலை ஓமிக்ரான் வடிவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் தொடர்ந்து ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23. தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்ப்பு கண்டறியப்படவில்லை.

6,822 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 558 நாட்களில் மிக குறைவான பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் முந்தைய நாளை ஒப்பிடுகையில் 17.9% குறைந்துள்ளது.

குணமடைதல் அதிகரிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 10,004 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 3,40,79,612 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் விகிதமானது 98.36% ஆக உள்ளது.

இந்தியாவின் ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 95,014. ஆக்டிவ் கேஸ்களைப் பொறுத்தவரையில் கடந்த 554 நாட்களில் மிக குறைவானதாகும். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது 0.27% மட்டுமே ஆகும்.

கேரளாவில் அதிகம்
மாநிலங்களைப் பொறுத்தவரையில் கேரளாவில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கேரளாவில் மொத்தம் 3,277 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 518, மேற்கு வங்கத்தில் 465, மிசோரமில் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
Recommended Video

கொரோனா தடுப்பூசிகள்
நாட்டின் இந்த 5 மாநிலங்களில்தான் மொத்த கொரோனா பாதிப்பு 77.83% ஆக பதிவாகி இருக்கிறது. மொத்த கொரோனா பாதிப்பில் கேரளா எண்ண்ணிக்கை மட்டும் 48.04% ஆகும். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 4,73,757 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் நேற்று அதிகபட்சமாக 168 பேரும் தமிழகத்தில் 10 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 79,39,038 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 1,28,76,10,590 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications