ஆக்டிவ் கேஸ்கள் குறைவு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,439 பேருக்கு கொரோனா; 195 பேர் மரணம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் ஓமிக்ரான் என்கிற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு மெதுவாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 8,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 12 நாட்களாக 10,000க்கும் கீழே இருந்து வருகிறது. கடந்த 164 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000க்கும் கீழே இருந்து வருகிறது.

ஆக்டிவ் கேஸ்கள் குறைவு
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,56,822 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 93,733 ஆக குறைந்துள்ளது. கடந்த 555 நாட்களில் மிக குறைவான எண்ணிக்கை இது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 0.27%. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மிகக் குறைவானதாகும்.

கொரோனாவால் 195 பேர் மரணம்
நாட்டில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த் 24 மணிநேரத்தில் கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,73,952, ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 9,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,40,89,137 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Recommended Video

மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்
கேரளா மாநிலத்தில்தான் அதிகபட்சமான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. கேரளாவில் மட்டும் நேற்று 134 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 19 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில்தான் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 1,41,194 பேரும் கேரளாவில் 41,902 பேரும் கர்நாடகாவில் 38,243 பேரும் தமிழகத்தில் 36,549 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியில் 25,099; உ.பியில் 22,911; மேற்கு வங்கத்தில் 19,562 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications