இந்தியாவில் வாகனங்களுக்கு மின்சார வழித்தடம்.. வரப்போகும் ஸ்வீடன்,நார்வே தொழில்நுட்பம்.. மாஸ் தகவல்
டெல்லி: ரயில்கள் மின்சார லைனில் இயக்கப்படுவது போல இந்தியாவில் வாகனங்களுக்கு மின்சார வழித்தடம் ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ஸ்வீடன்,நார்வே போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் ஆனால் மிகப்பெரிய மின்சார வாகன புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி , தினமும் உருவாகும் திடக் கழிவுகளால் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களும் பெரும் சுற்றுச்சூழல் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது. சுமாா் 10,000 ஹெக்டோ் பரப்பிலான நிலம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

3இந்த பிரச்சனைக்கு தீா்வாகத் திடக் கழிவுகளைச் சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதைப்படிம எரிபொருளைச் சாா்ந்திருப்பதையும் செலவுளையும் குறைக்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன்படி, கட்டுமான பணிகளுக்கான வாகனங்களில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வரைவு கொள்கை உருவாக்கப்பட்டிருகிறது.
இதில் வழங்கப்படும் வட்டி மானிய சலுகை, ஒப்பந்தாரா்களை இத்தகைய மாற்று எரிபொருள் வாகனங்களில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்க போகிறோம். இதற்கு ஒப்புதல் பெற நிதியமைச்சகத்திடம் பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகிறது.
போக்குவரத்துத் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. டெல்லி-ஜெய்பூா் இடையே, மின்சார ரயில்கள் இயங்குவது போன்றே மின்கம்பிகளைத் தொட்டு வாகனங்கள் செல்லும் 'மின் நெடுஞ்சாலை' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதாவது ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படுவது போல வாகனங்களுக்கு மின்சார வழித்தடம் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. இது, ஸ்வீடன்,நார்வே போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மின்சார கேபிள்கள் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்தப் பாதையில் வாகனங்கள் செல்ல போகின்றன. தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை எங்கள் அமைச்சகம் மதிப்பீடு செய்து வருகிறது.
அதிகரித்துள்ள எத்தனால் உற்பத்தி, வேளாண்துறை வளா்ச்சியில் 6 சதவீத உயா்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் விமான பயன்பாட்டில் ஒரு சதவீத 'உயிரி விமான எரிபொருளை' கலந்து பயன்படுத்த கட்டாயமாக்க உள்ளோம்.. எதிா்காலத்தில் 5 சதவீதம் என இந்த அளவு உயா்த்தப்படும்" இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

மின்சார கேபிள்களில் இயங்கும் வகையில் வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மின்சார வாகன புரட்சி நடக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஸ்வீடன் நாடு, வரம் 2025 ஆம் ஆண்டுக்குள் நிரந்தர மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.
இந்த சாலையில் சென்றால் மின்சார வாகனங்கள் எளிதாக சார்ஜ் பெய முடியும். இதேபோல் ஸ்வீடன் முழுவதும் பல்வேறு மின்மயமாக்கப்பட்ட சாலை அமைப்புகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. தெற்கு ஸ்வீடனில் உள்ள லண்ட் நகரில் முதல் மின்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கேபிள்கள் மூலம் வாகனங்களை அதில் ஓட்டலாம். அப்படி ஓட்டும் போது வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும். இந்தியாவிலும் இப்படியான சாலை உருவானால் மிகப்பெரிய அளவில் மின்சார வாகன புரட்சி ஏற்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications