இந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது!
டெல்லி: உலக நாடுகளிலேயே இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 3,03,30,051 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,50,084 ஆகவும் அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,20,18,259.

ஒருநாள் பாதிப்பில் முதலிடம்
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில்தான் உலக நாடுகளிலேயே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகம். அமெரிக்காவில் வியாழக்கிழமையன்று 42,241 பேருக்கும் 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 35,757 பேருக்கும் கொரோனா உறுதியானது. இந்தியாவில் ஒரேநாளில் 96,792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

52 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
இந்தியாவில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது. அதாவது 52,12,686 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரேநாளில் 87,778 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,09,828.

இந்தியாவில் ஒருநாளில் 1,175 பேர் மரணம்
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,175 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 84,404. இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் 24,617; கர்நாடகாவில் 9,366; ஆந்திராவில் 8,702 பேருக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒருநாள் பாதிப்பில் தமிழகம்
இந்தியாவில் ஒருநாள் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 6,029 பேருக்கும் தமிழகத்தில் 5560 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்களிலும் தமிழகம் 5-வது இடத்துக்கு பின் தங்கியிருக்கிறது. மகாராஷ்டிராவில் 468; கர்நாடகாவில் 93; உத்தரப்பிரதேசத்தில் 81; ஆந்திராவில் 72 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications